பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்ட்டர் கலகம் 49 டர்கள் அரசாங்கத்தினிடம் சரணடைந்தார்கள். டப்ளின் நகரத் தொண்டர்கள் பலரும், தங்கள். ஆயுதங்களேச் சமர்ப்பித்து விட்டு, அவ்வாறே சரணடைந்தனர். குடி யரசு விள்ம்பரத்தை வெளியிட்ட தாற்காலிக அரசாங்கத் தலைவர்கள் எழுவரும் அரசாங்கத்தினிடம் அடைக்கலம் புகுந்தனர். அவ்வெழுவரையும் தொண்டர்களுடைய தலைவர்கள் எழுவரையும் சுட்டுத் தள்ளவேண்டும் என்று ஜெனரல் மாக்ஸ்வெல் கொடுரமாக உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் நிறுத்திவைத்துச் சுடப்பட்டனர். வேறு பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னல் ஜன்ம தண்டனையாக மாற்றப்பட்டது. 122 மணி தர்களும் மார்கீவிக்ஸ் என்னும் ஒரு மாதும் ஜன்ம தண்டனையும் பிற தண்டனேகளும் பெற்றனர். மற்றும் கைதி செய்யப்பட்ட பலர் ஆங்கிலச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். ஜெர்மனியிலிருந்து திரும்பி வருகையில் சர்க்காரால் கைதிசெய்யப்பட்டார் என்று மேலே சொன்ன ஸர் ரோஜர் கேஸ்மென்டுக்கும் இங்கிலாந்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. அஸ்ட்டர் கலகம் முழுவதிலும் காலின்ஸ் தபால் * காரியாலயப் போராட்டத்தில் கலந்து கின்றன். பிளங் கெட்டின் மெய்ப் பாதுகாப்பு அவனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. தபால் காரியாலயம் தீப்பற்றி எரியும். பொழுது அவனுடைய கால்களிலும் எரியுங் கட்டைகள் விழுந்தன. அவனுடைய தலைவர் பிளங்கெட் மரணத் தருவாயில் இருந்தார். அவரைத் து.ாக்கிக்கொண்டு சென்று, ஒரு வாரப் போராட்டத்திற்குப் பின்னல் அவன் மூர் தெருவை யடைந்து, பின்னர் அரசாங்கத்தினிடம் ஆஜராஞன். அவனும் மற்றக் கைதிகளும் ரொதுண்டா 4 ســــصادoه