பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கோட்டம் 53 ஸ்தாபனத்தை அமைத்துக் கொள்வதற்கும் அரிய சங் தர்ப்பம் கிடைத்தது. சிறைச்சாலை அந்தத் தேசிய வீரரின் உள்ளத்தை உடைப்பதை விட்டு, அவர்களுடைய ஊக்கத்தையும் உறுதியையும் இடைவிடாது சோதனை செய்து பெருக்கி வந்தது. அது அவர்களின் தேச பக்திக்கு உரைகல்லாய் விளங்கியது. சிறைக் கோட்டை «»ապա, தனியறைகளேயும், இருட்டறைகளையும், கால் விலங்கு, கை விலங்கு, கடப்பாரை விலங்கு, கிலே விலங்கு முதலான விலங்குகளையும், இரக்கம் என்பதே இல்லாமல் பசையறக் காய்ந்த மனத்தினரான காவலர் களேயும் கண்டு நெஞ்சில் உரமில்லாதவர்களே கலங்கு வார்கள். ஆல்ை உள்ள வலியுடையார் இவற்றையெல் லாம் பொருட்படுத்த மாட்டார்கள். இடுக்கண் வரும் காலத்தில் அவர்கள் நகுவார்கள். ஆதலால், ஐரிஷ் கைதிகள் சிறைப்பட்டதல்ை அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சி வெதுப்புண்டது. அமைதியாகவும் ஆழமாகவும் அவர்கள் சிந்தனே செய்து, விடுதலையை எப்படி எட்டிப் பிடிக்கலாம் என்று திட்டங்கள் போட ஆரம்பித்தீனர். பிராங்கோச் சிறைச்சாலை அவர்களுடைய சதியா லோசனை மணிமண்டபமாக மாறியது. அந்தச் சிறை இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தென் பாகத்தில் தொழிற்சாலையின் அறைகளிலும், வட பாகத்தில் புதிதாய் அமைக்கப்பட்ட மரக் குடிசைகளி லும் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இரண்டு இடங்களுக்கும் கடுவே ஒரு ரஸ்தா இருந்தது. கைதிகள் தங்கள் விஷயங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள அதுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களில் சிலரைத் தலைவர்களாக நியமித்துக் கொண்டார்கள். மிகுந்த