பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மைக்கேல் காலின்ஸ்


54 மைக்கேல் காலின்ஸ் கட்டுப்பாட்டுடன் தங்கள் காரியங்களே நடத்தி வந்தார் கள். காலின்ஸ் வட பாகத்தில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் பிரிவுக்கு ஒரெய்லி தலைவன். 1916-ல் இங்கிலாங் திலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பிய பல வாலிபர்கள் அவனுடன் இருந்தனர். அவர்களுடன் காலின்ஸ் மிகுந்த தோழமை கொண்டான். சிறைவாசம் உடலை வருத்தி உள்ளத்தை மெலிவிப்பதாயினும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. எந்த நேரமும் குது கலத்துடன் அதுள்ளி விளேயாடி வந்தான். நண்பர்களுடன் பற்பல விளையாட்டுகளிலும் ஈடுபட்டான். அவன் தான் இருந் தது சிறை என்பதையே மறந்துவிட்டான். மற்ருே ருடைய கவலைகளேயும் அவன் மாற்றி வந்தான். விளே யாட்டுகளுடன், தினந்தோறும் பல மணி நேரம் தனி யாக உட்கார்ந்து புத்தகங்கள் பலவற்றைப் படித்தும் வந்தான். ஐரிஷ் பாஷையையும் தேச சரித்திரத்தையும் கற்பதற்கு அவன் மிகுந்த காலத்தைச் செலவிட்டான். கைதிகளிலே ஈஸ்ட்டர் கலகத்தைக் கண்டித்தவர் களும் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் ஆசை கொண்டவர் களும் சிலர் இருந்தார்கள். சிலர், கலகத்தில் ஏற்பட்ட தோல்வியில்ை உள்ளம் உடைந்து, மேற்கொண்டு அயர் லாந்துக்குக் கதிமோட்சமே இல்லையென்று கருதிர்ைகள். வேறு சிலர், போர் வெறி சிறிதும் குன் ருதவராய், எதைச் செய்தாகினும் விடுதலே பெறவேண்டும் என்று கருதினர்கள். அவர்கள் தங்கள் நோக்கத்தை ஈடேற் றிக் கொள்வதற்கு ஒரு தனிச் சங்கத்தை அமைத்துக் கொண்டார்கள். காலின்ஸ் அச் சங்கத்தில் இருந்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவனுடைய