பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கோட்டம் 55. திவிரவாதம் சில கிழவர்களுக்கும் பிற்போக்காளருக்கும் பிடிக்கவில்லை. அவன் அவர்களேப் பழங் கம்பளிகள் ' என்று ஒதுக்கி வந்தான். அவர்கள் அவனேக் கிறுக் கன் என்றும் தீக்கொளுத்தி என்றும் பழித்தார்கள். பிராங்கோச்சில் அடைக்கப்பட்டிருந்த ஐரிஷ்காரர் மீது குறிப்பிட்ட எந்த வழக்குமில்லை. ஆதலால் அவர் களில் விடுதலையை விரும்பினவர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்ப்ட்ட ஒர் ஆலோசனைச் சபையாரிடம் விண் ணப்பம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. வெறும் விண்ணப்பம் அனுப்பினுல் விடுதலே கிடைத்துவிடும். ஆல்ை, யார் மனுப் போடுவது ? ஒரு வரும் முன் வரவில்லே. அதிகாரிகள் கைதிகளுக்கு அட்ங்கிவிடுவார்களா? விண்ணப்பம் போடாவிட்டாலும், போட்டதாக அவர்களாகவே பாவித்துக்கொண்டு, கைதி களே லண்டனிலிருந்த ஆலோசனைச் சபையார் முன்பு கொண்டுபோய் நிறுத்தினர்கள். காலின்ஸ் உள்ளிட்ட பெரும்பாலோரும் யாதொரு வாக்குமூலமும் கொடுக்க மறுத்துவிட்டனர். அந்த விசாரணை மிகுந்த தமாஷாக இருந்தது. கைதிகள் சிறைகளுக்கு உள்ளேயோ வெளியேயோ தள்ளப்படும் உரிமை அதிகாரிகளுக்குத் தானே உண்டு. ஆதலால், தாங்கள் சிறையை விட்டு வெளியேற முடியாது என்று கைதிகள் பிடிவாதஞ் செய்தால், அவர்களே வெளியேற்றுவதுதானே தக்க தண்டனே ! அவ்வாறு பலர் உடனே விடுதலை செய்யப் பட்டார்கள். மூன்றில் ஒரு பாகத்தினரே மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இதற்குப் பின்பு சிறைக்குள்ளே குழப்பமும் கொடுமையும் அதிகரித்துவந்தன. கைதிகளில் 1916-ல்