பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மைக்கேல் காலின்ஸ்



களுடைய பெயர்க்களயும் வாசித்தார்கள். ஒருவரும்.முன் வரவில்லை. ஏனெனில், மைக்கேலுக்கு மணம் முடிய வில்லே என்றும், அதிகாரிகளாகக் கற்பனையாக அவனுக்கு ஒரு மனேவியைச் சிருஷ்டித்து அவளே நோயுறச் செய்திருக்கிரு.ர்கள் என்றும் எல்லாக் கைதி களுக்கும் தெரியும். இந்தச் சூழ்ச்சி பயனற்றுப் போகும் வேளையில், சில அதிகாரிகளுக்குப் பின்டனின் உருவம் தெரிந்திருந்ததால், அவனே மட்டும் பிடித்துக் கொண்டு போனர்கள். பின்னர் அதிகாரிகள் தங்களுக் குப் பெயர் தெரிந்தவர்களைச் சிறையின் வடபாகத்திலும், மற்றும் 200 பேர்க்கள்த் தென் பாகத்திலும் அடைத்து வைத்தார்கள். தென் பாகத்திலிருந்த 200 பேர்களும் உடனே உண்ணுவிரதம் ஆரம்பித்தனர். மூன்று நாள் உண்ணுவிரதத்திற்குப் பின்பு, அவர்கள் வட பாகத்தா ரோடு சேர்க்கப்பட்டனர். இதல்ை காலின்ஸ் சிறையில் கிரந்தரமான சமாதானம் ஏற்படமுடியாதென்று தெரிந்து கொண்டான். வெளியே செய்வதுபோல், சிறைக்குள்ளும் போராடவேண்டியது அவசியம் என்று உணர்ந்தான். பெயர் வாசிக்கும்பொழுது வழக்கம்போல் o தகராறு ஏற்பட்டுக்கொண்டே யிருந்தது. . . . . . பிராங்கோச்சில் அடைக்கப்பட்டிருந்த தேசபக்தர் களேத் தவிர, ஈஸ்ட்டர் கலகத்தின் தலைவர்களாகக் கரு தப்பட்ட 122 பேர்கள் வேறு சில ஆங்கிலச் சிறை களில் கொடுங் துன்பங்களிடையே புழுங்கிக்கொண்டிருந் தார்கள். சிறையில் வாடிய தேசபக்தர்களைக் குறித்து அயர்லாந்து முழுவதிலும் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்கப் பொதுஜனங்களிடையேயும் தீவிரமான பிரசாரம் செய்யப்பட்டது. அமெரிக்கா தன்னுடன்