உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கோட்டம் == 63 அக்காலத்தில், ஈஸ்ட்டர் கலகத்தில் உயிரிழந்தும், காடு கடத்தப்பட்டும், சிறையிடப்பட்டும் அவதியுற்ற தொண்டர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க இரண்டு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. பின்னல் இவ்விரு சங் கங்களும் ஒன்றுசேர்க்கப்பட்டு, ஐரிஷ் தொண்டர்கள் சகாய நிதி என்று ஒரு நிதி வசூலிக்கப்பட்டது. அக் நிதிக்கு மொத்தம் 1,88,000 பவுன் சேர்ந்தது. தீவிர தேசபக்தர்களெல்லாம் அந்நிதியை வசூலித்த ஐரிஷ் தேசிய உதவிச் சங்க”த்தில் வேலை செய்து வந்தார்கள். மைக்கேல் காலின்ஸ் விடுதலையடைந்த பின் மூன்று வாரம் வீட்டில் தங்கியிருந்து, டப்ளின் நகரை அடைந்து, பின் அச் சங்கத்தில் ஈடுபட்டு வேலை செய்து வந்தான். நண்பர்கள் பலரும் அவனுடன் ஒத்துழைத்தார்கள். காலின்ஸ் தொண்டர் படையையும் ஐரிஷ் குடியரசுச் சகோதரத்துவ சங்கத்தையும் புனருத்தாரணம் செய்தும் வந்தான். நாளுக்கு நாள் அவனுடைய செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வந்தது. காலின்ஸ் டப்ளினே அடைந்த காலத்தில் அந்நகரி லிருந்த ராஜவிசுவாசம் மிகுந்த ராயல் டப்ளின் சங்க”த் தார் கவுன்ட் பிளங்கெட் என்னும் தேசபக்தரை அங்கத் தினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டனர். இந்தப் பிளங் கெட் ஈஸ்டர் கலகத்தில் தாற்காலிக அரசாங்கத்தின் தலைவராயிருந்து சர்க்காரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜோஸப் பிளங்கெட்டின் தந்தை. உயிர்ப் பலி கொடுத்த ஒரு தியாகியின் தந்தையா யிருந்த காரணத்தாலேயே அவர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார் ! இந்த அநீதியை நீக்கி பிளங்கெட் குடும்பத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்று காலின்ஸ்