உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய ராணுவச் சட்டம் 67 வாலிபனைச் சிறைக்கு வெளியே கொண்டுவர வேண்டு மானுல் அவனைப் பார்லிமெண்டுக்குள்ளே அனுப்பினல் தான் முடியும் என்பது இவ்வாக்கியத்தின் கருத்து. அந்தத் தேர்தலில் ஜோஸப்பே வெற்றி பெற்ருன். இந்த வெற்றி ஈஸ்ட்டர் கலகத்தின் காரணஸ்தனுயிருந்த ஒருவனுக்குக் கிடைத்து விட்டதால் ஜனங்களின் அபிமா னம் எந்தப் பக்கம் திரும்பி கின்றது என்பது தெளிவா யிற்று. இதைக் கண்டு இங்கிலாந்து திடுக்கிட்டது. ஆங்கிலப் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ் அயர் லாந்தின் நாடிகளைப் பிடித்துப் பார்த்துக்கொண்டே யிருந்தார். லாங்போர்டு தேர்தலுக்குப் பின் அதற்கு ஜ-ரம் தலைக்கேறிவிட்டதென்று உணர்ந்தார். உடனே ஏதாவது பசப்பு வார்த்தை கூறவேண்டுமென்று கருதி, சுயஆட்சி கொடுப்பதற்காகப் பல ஐரிஷ் கட்சிகளின் பிரதிநிதிகளேயும் தாம் கூட்டிவைத்து முடிவு செய்யப் போவதாக அவர் அறிவித்தார். அப் பிரதிநிதிகள்' யாவர் அவர்கள் வெறும் சுயநலப் புலிகளே தவிர ஜனங்களின் பிரதிநிதிகளல்லர். ஜனங்களே ஏமாற்றிச் சுதந்திர வெறியைக் குறைக்கவே மதி மிகுந்த மந்திரி முனைந்து கின்ருர் என்பதைத் தீவிரவாதிகள் தெரிந்து கொண்டனர். வீரசுதந்திரம் வேண்டி யெழுந்தவர்கள் வேறு எதில் திருப்தி யடைவார்கள் மீண்டும் சுதந்திரக் கிளர்ச்சி புயல்காற்றைப் போல் எங்கும். விசிப் பரந்தது. அவிந்துபோகும் கங்குகளில் அனற்பொறி பற்றவைக் கப்பட்டது. தேசத்தில் ஒரு புதிய ஒளி சுடர்விட ஆரம் பித்த அ. லியூஸ் சிறையிலிருந்த் ஐரிஷ் கைதிகள் சிறைக்கு உள்ளும் வெளியும் அதிகாரிகளுக்கு ஒய்வு கொடுக்கக்