பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மைக்கேல் காலின்ஸ்


,68 மைக்கேல் காவின்ஸ் கூடாதென்று தீர்மானித்தனர். தங்கள் சொந்த வேலை களேத் தவிர வேறு வேலைகள் செய்யமுடியாது என் ஆறும், தங்களே யுத்தக் கைதிகளாகவே நடத்தவேண்டும் என்றும், அவர்கள் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத் தனர். அதன் விளேவாக அவர்கள் தனியறைகளியே தள்ளப்பட்டனர். பல நாள் தனிக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருந்தும், தொண்டர்கள் கலங்காமல் உண்ணுவிரதத்தை மேற்கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவந்தது. அயர்லாந்திலும் லியூஸ் கைதிகளின் சார்பாகப் பெருங் கிளர்ச்சி செய்யப்பட்டது. ஆங்கிலப் பிரதம மந்திரி தாமாகவே அந்தக் கைதி களே விடுதலை செய்யவேண்டும் என்று கருதினர். ஆல்ை கைதிகளுக்குப் பயந்து விடுதலை செய்ததாக ஏற்படக் கூடாதே என்ற கவலையால், தாமதித்துவந்தார். கடைசியில் ஜூலை மீ 15-ம் தேதி, அயர்லாந்தின் கல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதற்காக, கைதிகளே விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவித்தது. அதன் படி டிவேலரா முதலிய வாலிபச் சிங்கங்கள் யாவரும் தாங்கள் அடைக்கப்பட்டிருந்த குகைகளிலிருந்து வெளிப் பட்டுத் தாய்நாடு சேர்ந்தனர். - விடுதலையான வீர சிகாமணிகளே டப்ளின் வாசிகள் ஆனந்தத்துடன் வரவேற்றனர். யாவர் மனத்திலும் அயர்லாந்தின் பண்டைப் பெருமையும், அதன் சுதந்தி சத்திற்காக உயிரிழந்த தியாகிகளின் ஞாபகமும் கிளர்ந் தெழுந்தன. அறிவும் ஆற்றலும் மிக்க டிவேலரா ஜனங்களின் அளவற்ற அபிமானத்திற்குப் பாத்திரராக விளங்கினர். அவரும் அவர் தோழர்களும் சென்ற இடமெல்லாம் அன்பு அரும்பி, தியாக மணம் கமழ்ந்தது.