கட்ட்ாய ராணுவச் சட்டம் 69*. மக்கள் பரவசமடைந்து ஆடினர். ஒரு வருஷத்திற்கு முன்னலிருந்த ஜனங்கள் இப்பொழுது எங்கோ மறைந்து விட்டார்கள்; இவர்கள் புதியவர்கள்!' என்று சொல்லக் கூடிய முறையில் அவர்கள் புத்துணர்ச்சி கொண்டு அதுடித்தனர். வாழ்க அடக்குமுறை! என்று அவர்கள் களிப்புடன் வாழ்த்துவது போல் காணப்பட்டனர். ஏனெனில், நீரின் அளவாக கிற்கும் ஆம்பல் போல் அடக்குமுறையின் அளவுக்குத் தக்கதாகவே சுதந்திர. எழுச்சி தோன்றுகிறதல்லவா? டிவேலரா பார்லிமெண்டு அங்கத்தினர் ஸ்தானத் திற்கு அபேட்சகராக கின் அறு வெற்றி பெற்ருர். எதிரியைப் பார்க்கிலும் 2,975 ஒட்டுகள் அவரு க்கு அதிகமாய்க் கிடைத்தன. வெற்றிக்குப் பின் அவர் பார்லிமெண்டுக்குப் போய்த் தாம் அங்கே அமரப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இந்தத் தேர்தலில் ஒரு விசேஷம் குறிப்பிடத்தக்கது. தொண் டர்கள் மறைவா யிருந்ததை விட்டு, தங்கள் படைக்குரிய உடைகள் அணிந்து, வெளிப்படையாகக் கூட்டங்களி லும் ஊர்வலங்களிலும் கலந்துகொண்டனர். காலின்ஸ், வழக்கம்போல், குன்ருத ஊக்கத்துடன் தொண்டர் படையிலும் ஐரிஷ் குடியரசுப் படையிலும்' உழைத்துவந்தான். அவனும் அவன் தோழர்களும் 6 வாகான் ஹோட்டல் என்னும் விடுதியில் அடிக்கடி ரகசியமாகக் கூடிப் பேசுவதுண்டு. இந்த விடுதி ஐரிஷ் சுதந்திரப் போரில் ஒரு முக்கியமான ஸ்தானம் பெற். றிருக்கிறது. இங்குதான் காலின்ஸின் திட்டங்கள் பலவும் அரங்கேற்றப்பட்டன. டயர்மீட் லிஞ்ச், ஹாரி போலண்டு என்ற நண்பர்கள் காலின்ஸின் இரு கரங்களாக
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/74
தோற்றம்