இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70
மைக்கேல் காலின்ஸ்
70. மைக்கேல் காலின்ஸ் கின்று பிரசாரம் செய்துவந்தனர். தேசம் முழுவதும் ஸின் பீன் பிரசாரமும், தொண்டர் படை கிறுவலும் . தீவிரமாய் கடந்துவந்தன.
- சிறையிலிருந்தவர் யாவரும் விடுதலை செய்யப் பட்டதுடன் அடக்குமுறை ஒயவில்லை. மழை விட்டதே ஒழியத் தூவானம் விடவில்லை. ஆகஸ்டு மாதத்தில் மூன்று தலைவர்கள் ராஜத்துவேஷக் குற்றத்திற்காகச் சிறையிடப்பட்டார்கள். வேறு 40 இ&ளஞர்களும் கைதி செய்யப்பட்டனர். மறுபடி சிறைக்குள் உண்ணுவிரதம் ஆரம்பமாயிற்று. வெளியில் தேசமெங்கும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதிகாரிகள் கைதிகளுக்குப் பலவந்தமாய் உணவூட்ட முயன்றனர். தாமஸ் ஆஷ் என்ற வாலிபன் ஐந்து நாள் உண்ணுவிரதத்திற்குப் பின் மேட்டர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கு சில மணி நேரத்தில் அவன் ஆவி பிரிந்தது. வாலிபமும், கம்பீரமும், செளந்தரியமும், செளரியமும் வாய்ந்த அவ் வீரனுடைய உயிர் பலிகொடுக்கப் பட்டதைக் கண்டு மக்கள் யாவரும் திடுக்கிட்டனர். 30,000 மக்கள் மேட்டர் வைத்தியசாலைக்குச் சென்று அந்த ஷஹீதின் *திருமுகத்தைத் தரிசித்தனர். ஆவதின் உடல், தொண்டனின் உடை அணிவிக்கப்பட்டு, அலங் காரத்துடன் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவர் எல்லாரும் உள்ளங் குழைந்து கண்ணிர் வடித்துக் கதறினர். ஒரு தொண்டனின் வீர மரணம் தேசத்தையே தட்டி யெழுப்பிவிட்டது. ஆவதின் இறுதிச் சடங்குகள் தொண்டர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டன. அவன்
மரணத்தால், இரங்காத அரசாங்கமும் இரங்கியது; ஷஹீத்-உயிரைப் பலி கொடுத்த தியாகி.