பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய ராணுவச் சட்டம் 7k ராஜீயக் கைதிகளுக்குப் புதிய அந்தஸ்துக் கொடுத்தது. ஆஷின் மரணத்தைக் குறித்து விசாரித்த பஞ்சாயத் தாரும் அதிகாரிகளின் நடத்தையைப் பலமாகக் கண்டித் தனர். 50-மணி நேரமாக ஆவதினுடைய படுக்கையும் பூட்ஸ்-களும் பிடுங்கப்பட்டு, அவன் குளிர்ந்த தரையில் கிடக்கும்படி செய்ததும், பலவந்தமாய் உணவூட்டியதுமே அவன் மரணத்திற்குக் காரணம் என்று அவர்கள் முடிவு கூறினர். இதன் பின்பு சில கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். அக்காலத்தில் தேசப் புனருத்தாரணத்திற்கு ஏற்ற கிலேமை ஏற்பட்டிருந்தது. பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அங்கு செல்லாமல் தவிர்ந்துவிட வேண்டும் என்றும், ஒரு தேசியச் சட்ட சபையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஐரிஷ் பாஷையை வளர்க்கவேண்டும் என்றும், தேசியக் கைத் தொழில்களேச் சீர்திருத்தவேண்டும் என்றும், அயர் லாந்தின் தேசியச் சட்டசபை சமாதான மகாகாட்டுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் திட் டங்கள் வகுக்கப்பட்டன. இந்தத் திட்டங்களே அடிப் படையாகக் கொண்டு தேசிய இயக்கம் வளர்ச்சி யடைந் தது. அமிதவாதமுள்ள தீவிரவாதிகளும் இயக்கத்தில் கலந்துகொண்டு இடைவிடாது கிளர்ச்சி செய்து வந்த னர். காலின்ஸ், லிஞ்ச் முதலியோர் அவர்களின் தலை வர்களாய் விளங்கினர். 1917-ம்u அக்டோபர்மீ 25-ந்தேதி ஸின்பீன் தேசியவாதிகளின் வருஷாந்தர மகாநாடு கூடியது. தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் விஜயஞ்செய்திருந்தனர். மகாகாட்டின்