பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மைக்கேல் காலின்ஸ்


72 மைக்கேல் காவின்ஸ்ட் ; =h. - தலைமைப் பதவிக்கு கிரிபித், பிளங்கெட், டிவேலரா ஆகிய மூவருடைய பெயர்களும் பிரேரேபிக்கப்பட் டிருந்தன. கிரிபித் வீரத்துடன் எழுந்து, தம் பெயரை வாபஸ் வாங்கிக்கொண்டு, யுத்த வீரராயும் ராஜதந்திரி. யாயும் விளங்கிய டிவேலராவையே தேர்ந்தெடுக்கும்படி வேண்டினர். பிளங்கெட்டும் அதை ஆமோதித்தார். எனவே டிவேலரா தலைவராயும் கிரிபித் உபதலைவராயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் மகாநாட்டில் முக் கியமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து வரக்கூடிய தேர்தலில் லின் பீன் அங்கத்தினர் சகல ஸ்தானங்களுக்கும் கின்று, தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பார்லிமெண்டுக்குச் செல்லாமல், * டெயில் ஐரான் ’ என்ற பெயருடன் தேசீயச் சட்டசபையாகக் ـاهة வேண்டும் என்பதே அத் தீர்மானம். வின் பின் மகாநாட்டைத் தொடர்ந்து ஐரிஷ் தொண்டர்கள் மகாநாடும் நடைபெற்றது. தொண்டர் படை எப்பொழுதுமே லின்பீன் சங்கத்திற்குக் கட்டுப் பட்டிருக்கவில்லை; ஆதலால் அது சுயேச்சையாகத் தீர்மானஞ் செய்ய உரிமை பெற்றிருந்தது. எந்தச் சமயம் அவசியமானுலும் அரசாங்கத்தின்மேல் போர் தொடுக்க கிர்வாக சபைக்கு அதிகாரம் கொடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டாய ராணுவச் சட்டம் என்னும் வாளாயுதம் அயர்லாந்தின் தலைமேல் தொங்கிக்கொண்டே யிருந்ததால், எந்த நிமிஷமும் அது அறுந்து தலைமேல் விழுந்துவிடும் என்ற காரணத் தாலேயே இவ்வாறு கிர்வாக சபைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. நெருக்கடியான நிலைமையில் மகா நாடு கூட்ட முடியாது என்பதைக் கருதி, வெள்ளத்திற்கு