பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய ராணுவச் சட்டம் 75. மடிவதே சுதந்திர லட்சியத்திற்கு மார்க்கம் என்.அறு: கருதினர். சட்டத்தை எதிர்த்து நிற்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கட்டாய ராணுவச் சட்டத்தினுல் இங்கிலாந்து அயர்லாந்தின் மேல் போர் தொடுத்திருப்பதாகப் பிர சாரம் செய்யப்பட்டது. டப்ளினில் எமின் பீன், ஐரிஷ் கட்சி, தொழிற்கட்சி முதலிய எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மகாநாடு கூட்டி சட்டத்தை எதிர்த்து ஒழிக்கத் தீர்மானிக்கப்பட்டது. கத்தோலிக் குருக்களும் போராட்டத்திற்கு உதவியாக முன்வந்தனர். ஒவ்வொரு மாதாகோவிலிலும் கட்டாய ராணுவச் சட்ட எதிர்ப்புப் பத்திரங்களில் ஆயிரக் கணக்கான கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. தேசப் பாதுகாப்பு நிதி யொன்று வசூலிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தேசம் முழுவ திலும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சுருங்கச் சொன்னல், அச்சட்டத்தினுல் பகைமை கொண்ட சங்கங் கள் எல்லாம் ஐக்கியப்பட்டன : உறங்கினவர்கள் யாவரும் விழித்துக்கொண்டார்கள். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலே லாயிட் ஜார்ஜ் நியமித்த ஐரிஷ் சர்வகட்சி மகாநாட்டின் முடிவு ஒர் அறிக்கையில் வெளியிடப்பட்டது. அயர்லாந்தைப் பிளவு செய்யவேண்டும், ஆனல் பல கட்டுப்பாடுகளே யுடைய சுதந்திரமும் கொடுக்கவேண்டும் என்று அதன் படி கூறப்பட்டது. ஐரிஷ் தேசபக்தர்கள் அவ்வறிக் கையைக் கண்னெடுத்துப் பார்க்கவில்லை. போர்க் களத்தில் கின்றவர்களுக்குப் பழைய பஞ்சாங்கம் எதற்கு? ராஜ விசுவாசமுள்ள ஐரிஷ் கட்சியார்கூட அதைத் திண்டவில்லை. அறிக்கையைத் தயாரித்த கும்பல், சர்வ