பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மைக்கேல் காலின்ஸ்


84 மைக்கேல் காலின்ஸ் டிருக்கிறது. சில அதிகாரிகளின் கட்பிளுல் இங்கிலாந்தி லிருந்து முக்கியமான அரசாங்கத் தகவல்களேத் தெரிந்து கொள்ள அவன் ஏற்பாடு செய்துகொண்டான். அயர்லாந்தில் நடக்கும் விஷயங்களே அமெரிக்கா இங்கிலாந்து முதலிய நாடுகளிலிருந்த தோழர்களுக்கு அறிவிப்பதற்கும், அவர்களிடமிருந்து தகவல்கள் தெரிந்து கொள்வதற்கும் அவன் தக்க நபர்களேத் து தர்களாக நியமித்துக்கொண்டான். ஆயுதங்கள் வரவழைப்பதற்கும், அரசாங்கத்திற்குத் தெரியாமல் சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும், வெளியி லிருந்து அயர்லாந்துக்கு அழைத்து வருவதற்கும் கப்பலோட்டிகள் பலருடைய நட்பு அவசியமாயிருந்தது. அதற்காக காலின்ஸ் சில கப்பலோட்டிகளேயும், கப்பல் வேலைக்காரர்களேயும் சிநேகங் கொண்டான். அவர்களில் கெர், லணிகன், கவனுக் முதலியோர் முக்கியமானவர். உள் நாட்டில் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அனுப்பி வரும் தகவல்களும் தபால் இலாகாவில் வேலேபார்த்து வந்த காலின்ஸின் நண்பர்களால் அவனுக்கு அடிக்கடி அறிவிக்கப்பட்டன. அரசாங்கமும் விசேஷ முன்னேற்பாடுகளைச் செய்து வந்தது. நாடெங்கும் படை சேர்க்கும் ஸ்தாபனங்களே ஏற்படுத்தியது. ஜூன் மாத ஆரம்பத்தில் அ ஆ ஒர் அறிக்கையை வெளியிட்டு ஐரிஷ்காரர்கள் பட்டாளத்தில் சேரவேண்டுமென்று கேட்டுக்கொண்டது. அந்த அறிக்கையில், 50-ஆயிரம் ஐரிஷ்காரர் அக்டோபர் முதல் தேதிக்குள் ஆங்கிலப் பட்டாளத்தில் சேரவேண்டும் என்றும், அதற்குப் பின் மாதந்தோறும் 2- அல்லது 3ஆயிரம் பேர் சேர்ந்துவர வேண்டும் என்றும் குறிப்பிடப்