பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மைக்கேல் காலின்ஸ் வானம் துளங்கினும் மானம் துளங்காத தொண்டர்கள் இன்னல்களே யெல்லாம் இனிதே ஏற்றுக்கொண்டனர். தண்டனைக் காலம் முடிவடைந்த தொண்டர்களேயும் வெளியே விடாது, எல்லாத் தொண்டர்களேயும் இங்கி லாந்திலுள்ள சிறைகளுக்கு அனுப்பிவிட்டது அர சாங்கம். போ குமுறிக்கொண்டிருக்கும் பொழுது காலின் ல-க்கு நோயுண்டாயிற்று. அவன் சுவாசப் பைகளில் இடைவிடாத வலி யேற்பட்டுப் படுக்கையில் சுருண்டு கிடந்தான். நோய் தன்னிடம் கொஞ்சிக்கொண்டிருக்க இடங்கொடுக்கக் கூடாதென்று அவன் தீர்மானித்தான். நான் போகும்வரை வேலை காத்திருக்குமா ? என்று அவன் அடிக்கடி வருந்தின்ை. விரைவில் எழுந்து மீண்டும் தன் வேலைகளே மேற்கொண்டான். அயர்லாந்தின் பல பாகங்களிலிருந்தும் முக்கியமான தொண்டர் படை அதிகாரிகளே வரவழைத்து மகாநாடு கூட்டி யோசித்தான். மொத்தம் லட்சம் தொண்டர்கள் சேர்ந்திருப்பதாய்த் தெரிந்தது. காலின்ஸ் ஸின் பீன் நிர்வாக சபையிலும் அடிக்கடி கலந்து கொண்டான். ஏனென்ருல், ஐரோப்பா யுத்த முடிவில் அயர்லாந்தின் சுயேச்சை குறித்துச் சமாதான மகாகாட்டில் தெரியப் படுத்த வேண்டியது அவசியமா யிருந்தது. அக்டோபர் மாத முடிவில் ஸின் பீன் வருஷாந்த மகாநாடு கூட்டப் பட்டு முக்கியமான விஷயங்கள் பரிசீலனே செய்யப் பட்டன. தொண்டர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடு பட்டுப் பயிற்சி பெற்றுவந்தனர். பெருங் கூட்டத்தா ராகிய பட்டாளத்தாரைச் சிறு தொகையினராக நின்று: