பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெயில் ஐயான் * எதிர்க்கும் முறையை அவர்கள் விரைவில் நெடு: கொண்டனர். ஒரு சமயம் லின் பின் தலைமைக் காரியா லயத்தை 700 சிப்பாய்கள் சூழ்ந்து முற்றுகை யிட்டனர். 50 தொண்டர்கள் அவர்களே எதிர்த்து அரும் போர் செய்து அவர்களுக்குப் படுகாயம் விளேத்தனர். கட்டி டத்தில் சில சாளரங்கள் மட்டுமே சேதமாயின. ஆனல், சிப்பாய்களில் பலர் காயமடைந்து வைத்தியசாலைக்குச் சென்றனர். தொண்டர்கள் கைதியாகும் போதும் முன் போல் அமைதியாகக் கைதியாவதில்லை; கைதியாவதற்கு முன்னல் எதிரிகளிடம் போராடிய பின்பே அவர்கள் கைகளில் விலங்கு மாட்ட முடிந்தது. கார்க் நகரில் நெல்லிஸ் என்னும் தொண்டனேக் கைதி செய்தபொழுது, அவன் போலீஸாரை நோக்கிச் சுட ஆரம்பித்தான்! தலைமை அதிகாரிக்குத் தலையில் காயமுண்டாயிற்று. நெல்லிஸ் பின்னல் சிறைவைக்கப்பட்டான். ஆளுல்ை, யுத்த சமாதான தினமாகிய நவம்பர் 11-ங் தேதிக்குப் பின் ஐந்து தொண்டர்கள் கார்க் சிறையிலிருந்து அவனே விடுவித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். யுத்தம் முடிந்துவிட்ட பின் ஆங்கில அரசாங்கம் பார்லிமெண்டு ஸ்தானங்களுக்கு அயர்லாந்தில் பொதுத் தேர்தல் கடத்தப்போவதாய் அறிவித்தது. பார்லி மெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்கள் சிமைக்குச் செல்லாது, அயர்லாந்திலேயே தேசியச் சட்டசபை ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வெகுநாளேக்கு முன்னரே வின் பீன் கட்சியார் திர்மானித்திருந்தனர். ஆதலால் தேர்தலில் ஸின் பீன் தலைவர்கள் தீவிரமாய் ஈடுபட்டனர். அபேட்சகர்கள் பெயர்கள் பதிவுசெய்யப்பட்ட தினத்திலேயே 26