பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 9].

  • தான வாயிலைத் தவிர அதற்குப் பின்பக்கத்திலும் ஒரு வாயிலுண்டு. அந்த வாயில் வழியாகவே ஞாயிற்றுக் கிழமை மதபோதகரான பாதிரியார் வருவதுண்டு. அவ்வாயிலிலுள்ள கதவுக்கு ஒரு திறவுகோல் கிடைத் தால் டிவேலரா முதலியோர் தப்பியோடுவது சுலபம். ஒருகாள் பாதிரியார் மறதியால் தம்முடைய சாவியை ஒரிடத்தில் வைத்துவிட்டுச் சென்ருர். சமயம் பார்த்து டிவேல்ரா மெழுகுவர்த்தியில் அதை அழுத்தித் தடம் செய்துகொண்டார். சித்திரம் வரையத் தெரிந்த கண் பன் ஒருவன் அந்தத் தடத்தை வைத்துக்கொண்டு ஒரு கடிதத்தில் இரண்டு சித்திரங்கள் வரைந்து கொடுத் தான். முதல் சித்திரத்தில் ஒருவன் தன் விட்டுக் கத வில் திறவுகோல் ஒன்றை வைத்துத் திறப்பதுபோல் காட்டப்பட்டிருந்தது. அதன் அடியில், கான் உள்ளே புக முடியவில்லை !' என்று எழுதப்பட்டிருந்தது. அடுத்த சித்திரத்தில், ஒரு கைதி ஒரு பெரிய திறவு கோலால் சிறைக் கதவைத் திறக்க முயலுவது போல் போடப்பட்டிருந்தது. அதன் அடியில், நான் வெளியேற முடியவில்லே ' என்று எழுதப்பட்டிருந்தது. அதில் கண்ட திறவுகோல் சிறையின் பின்பக்கக் கதவின் திறவு கோலின் அளவாகவே இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டி கைக் காலமாதலால், அதிகாரிகள் அக்கடிதத்தைக் காண நேரின், ஏதோ கைதிகள் விளேயாட்டுக்காகப் படங்கள் வரைந்திருந்ததாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்றே அந்தச் சித்திரங்கள் போடப்பட் டிருந்தன. அந்தக் கடிதமும், அதிலுள்ள படங்களின் பொருளே விளக்கும் மற்ருெரு கடிதமும் ஷெபீல்டு என்னும் ஊரிலுள்ள கண்பன் ஒருவனுக்கு அனுப்பப்