பக்கம்:மொழியின் வழியே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பத்திரிகைகளும் மொழிநடையும்

இன்று தமிழ் நாட்டில் வெளியிடப்பெறும் நாளிதழ்களும், வார, மாத இதழ்களும், விற்பனை வளத்தாலும், படிப்போர் தொகை மிகுதியாலும் பிற இந்திய மொழிகள் யாவிற்கும் இல்லாத சிறப்பும் செம்மையும் பெற்றிருப்பதாகச் சொல்லுகிறார்கள். இக் கூற்று மெய்யாகவே இருக்கலாம். அவ்வாறு இருந்தால் அது நாம் பெருமைப் படுவதற்குரிய செய்தியும் ஆகும். ஆனால், எவ்வளவு மக்கள் படிக்கிறார்கள்? எவ்வளவு நிறைவாக விலை போகிறது? - என்று இவற்றால் மட்டும் பத்திரிகைகளின் தகுதியை முடிவு செய்வதற்கு இல்லை. மொழிப்பற்றும், மொழி நடையும், உண்மையான தொண்டும், எவ்வளவில் மிகுந்திருக்கின்றன? என்பதைப் பொறுத்தே தகுதி அமைகிறது.

பலர் வாங்குகிறார்கள், பலர் படிக்கிறார்கள், பலர் பாராட்டுகிறார்கள் என்பதற்காக மட்டும் நல்லதாகிவிட முடியுமா? சிலர் வாங்கிப் படிக்கிறார்கள், சிலரினும் சிலரே புகழ்கிறார்கள் என்பதற்காக மட்டும் கெட்டதாகி விட முடியுமா? பெருமை பன்மையைப் பொறுத்து அன்று; உண்மையைப் பொறுத்தே ஏற்படுகிறது.

மொழியின் பழமையையும் மரபையும் இலக்கண முறைகளையும் அறவே வெறுத்து ஒதுக்கி எதிர் நீச்சுப் போடுவதால்தான் தங்களுக்குப் பெருமை கிடைக்கிறதென்று இன்றுள்ள பத்திரிகையாளர்களிற் பெரும்பாலோர் எண்ணி வருகின்றனர். பூனை கண்ணை மூடிக் கொண்டு, தனக்கு மட்டும் தென்படுகின்ற இருளால் உலகெங்குமே இருண்டு விட்டதாக எண்ணிக்கொள்வது போல இருக்கிறது இவர்கள் நிலை. - -

அன்றாடங் காய்ச்சிகளான நாளிதழ்களிலிருந்து மாத இதழ்கள் வரை (ஒரு சிலவற்றைத் தவிர) பெரும்பாலான