பக்கம்:மொழியின் வழியே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மொழியின் வழியே!

மொழிப் பழக்கம் குன்றிப் போகிற சொற்கள் அகராதியிலும், புலனெறி வழக்கிலுமே தங்கி விடுகின்றன. அவ்வாறு தங்கத் தங்கச் சொல்லின் வழக்கும், வலிமையும் குன்றி நடையிழக்க நேரிடுகிறது. -

சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன் படுத்தாமையினாலும் சில சொற்கள் வழக்கு இழப்பது உண்டு. அழகு, எழில், சாயல், ஏர், கவின், வனப்பு, - இவையனைத்தும் அழகென்னும் ஒரே பொருளைத் தருவனவாயினும் இட மறிந்து, நிலையறிந்து, தரத்துக்கேற்ப ஒவ்வொரு சொல்லையும் பயன்படுத்தலாம். அவ்வாறின்றி ஒருவர் 'எழில் என்ற சொல்லின் மேல் தமக்குள்ள பித்துக் காரணமாகப் பேசும் போதும், எழுதும்போதும், உரையாடும்போதும், கனவினும், நினைவினும், எங்கும், எதற்கும் 'எழில் ஒன்றையே பயன் படுத்துவாராயின் அவரை என்னவென்பது ? சொல்லைப் பயன்படுத்துவதில் பொறுப்பு வேண்டும். வெறி கூடாது. தனக்கென்று அறிவுச் செருக்கும், ஆணவமும் இருப்பதாகக் கருதிக் கொண்டு ஒரேபொருளை உணர்த்தும் பல தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டுக் குறிப்பிட்ட ஒரு சொல்லையே நிலைநாட்ட முயலும் பேதைமை கூடாது. இந்தப் பேதைமையால் அந்தப் பொருளைத் தரும் மற்ற வார்த்தைகள் மறைய நேரிடும்.

ஆனால், சொற்களின் மேல் வெறிபிடித்தவர்களையே இன்று எங்கும் காண்கிறோம். சொற்களின்மேல் அன்பு செலுத்துகிறவர்களைக் காணமுடிவதில்லை. சுவையும், இடமும், தரமும், அறிந்து தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த அமைந்த மனநிலையும் தெளிந்த அறிவுமுள்ளவர்களால்தான் இயலும். சொற்களை வழிபாடு செய்யுங்கள், வீரவணக்கம் புரியவேண்டாம். சொற்களின்மேல் அன்பு செலுத்துங்கள், ஆட்சிபுரிய வேண்டாம். சொற்களைப் போற்றுங்கள், சிறைப்