பக்கம்:மொழியின் வழியே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 107

படுத்த வேண்டாம். தமிழிலுள்ள எளிய அல்லது கடுமையான - அத்தனை சொற்களும் நம்முடைய செல்வம். நாம் அன்பு செலுத்தி ஆள்வதற்கு உரியவை. காற்று' என்ற நற்றமிழ்ச் சொல் பலர்க்கும் புரிகிறதென்ற ஒரே காரணத்தை அதன் தகுதியின்மையாகக் கொண்டு வளி' - என்னும் சொல்லைப் பயன்படுத்தித் தன் கடுஞ்சொற் புலமை கண்டு பாமரர் வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தும் புலமை ஆணவத்தை என்னவென்பதென்றே தெரியவில்லை. வழக்கு நடைக்குத் தெளிவு என்பதும் ஒரு கருவியாகும். மேலும் காற்று என்பதும் நமது தமிழ்ச் சொல்தானே?

தூய்மையிலும் எளிமை வேண்டும். சொற்களைக் காட்டிலும் அவை தரும் பொருளே சிறந்தவை. சொற்கள் பொருளுணர்த்தும் கருவிகளே. ஏரால் உழ முடிந்த அளவிற்குச் சிறிய நிலத்தை உழுவதற்கு டிராக்டர் தேவையில்லை. பலர்க்கும் புரிய ஏற்ற எளிய தூய தனித் தமிழ்ச் சொற்களை விட்டுச் செய்யுள் நடைத் திரி சொற்களை வழக்கிற்குத் தேடுவானேன்? -

"சமையலறைக்குச் சென்று விரைவில் சோறு கொண்டு வருக! - என்ற தூய எளிய தனித் தமிழ்ச் சொற்றொடரை, அட்டிற்புக்கு அடிசிற்கடிதிற் கொடு வா - எனச் செய்யுள் நடை போல வலிந்து கூறுதல் உரை நடைப் பொருளுணர்ச்சிக்கு ஏற்றதன்று. - சொற்றொடர் நிலை

சொல் தொடரும் நிலைக்குத்தான் வாக்கியம் - என்று பெயர் சொற்கள் தொடர்ந்து வாக்கியமாகும் நிலையை இன்றைய வழக்கிற்கு ஏற்பப் பேசும் மொழி வாக்கியம், எழுதும் மொழி வாக்கியம், என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பேசும் மொழி வாக்கியங்களை இலக்கண