பக்கம்:மொழியின் வழியே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மொழியின் வழியே!

வரம்புச் சிறைகளில் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தி னாலும் மாந்தர் வழக்கு நிலையின் எளிமைக்கேற்ப அவை திரிந்தும், குறைந்துமே தன்னியல்பு பெற்று வழங்கும். எழுதும் மொழி வாக்கியத்துக்கு வரம்புகள் உண்டு. அவற்றைக் கடைப் பிடித்துப் போற்ற வேண்டியது அவசியமுமாகும். அவசிய மாயினும் வாக்கியங்களுக்காக வரம்புகளேயன்றி வரம்பு களுக்காக வாக்கியங்களில்லை என்பதையும் உணர்தல் வேண்டும். அழகும், தெளிவும், எளிமையும், இயல்பும் முக்கியம். அவற்றோடு தானாகவே வந்து அமைந்துவிடுகிற ஒரு வகை ஒழுங்கு அல்லது முறைமைதான் வாக்கியத்துக்கு வரம்பு.

'கவிதை திரட்டுப்பால்போல் பெருக்கத்தைத் திரட்டிய சுவைச் சுருக்கம் என்றால் உரைநடை கறந்த பால் போல் இயல்பு நிலையை உடையது. தன் இயல்பான நிலையில் உள்ள கறந்த பாலில் அது ஏற்றுக்கொள்ள முடியாத வேறு பொருள் கலந்துவிட்டால் திரிந்து கெட்டுப் போவது போல், இயற்கையான உரைநடையில் செய்யுள் நடைக்கேற்ற திரிசொற்கள் கலந்தால் இயல்புநிலை கெட்டுத் திரிந்து விடுகிறது. - -

குடியரசு முறையில் மக்களுக்குள்ள உரிமையின் மிகுதியைப் போல மொழியில் எளிமையை விரும்புகிற வர்களின் உரிமை உரைநடை, மில் துணி கட்டிக்கொண்டு கதர்த்துணி அணியுமாறு அறிவுறுத்த வரும் சொற்பொழிவாளர் போல உரைநடையை வளர்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டே தெளிவையும், எளிமையையும், புறக்கணிப்பது பொருத்தமற்றது. முடியாட்சியும், தனி மனித அதிகாரமும், அழிந்து உலகெங்கும் தலையெடுக்கும் குடியாட்சி முறை போல் கவிதை நடையின் வீறு குன்றி உரைநடை வீறு பெற்றெழுந்து வளரத் தொடங்கி யிருக்கும் காலம் இது.