பக்கம்:மொழியின் வழியே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மொழியும்

பொறிபுலன்களால் நுகர்ச்சி செய்வதற்குரிய யாவும் சுவைகளே. புலனுக்கும் சுவைக்கப்படுகிற பொருளுக்கும் இடையே உள்ள ஈடுபாடே சுவையுணர்ச்சி. மெய்ப்பாடு, பாவம், சத்துவம் என்னும் சொற்களும் சுவைப்பொருள் உடையன. சுவை இரண்டு பகுதியாகப் பிரியும். சுவைத்தோன், சுவைக்கப்பட்ட பொருள் என்பனவே அவ்விருபகுதி. சுவைத்ததற்குப் பின்னர் சுவைத்தோனிடத்தில் நிகழ்கின்ற கண்ணிர் விடுதல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் போன்ற வேறுபாடுகளைச் சத்துவம் என்று குறிப்பிடுவர். சுவைத்தோனுடைய உள்ளத்தில் அச்சுவையினால் நிகழும் குறிப்பைப் பாவம்' என்று குறிப்பிடுவர். ஆகச் சுவையானது, சுவைக்கப்படும் பொருள், சுவைக்கின்ற பொறியுணர்வு, சுவைப்போன் மனோபாவம், அவன்புறத்தில் நிகழும் சத்துவ வேறுபாடுகள் என நான்கு வகையாக விரிந்து நிகழ்கின்றது. இவை சுவையின் வகைகளைப் பற்றிய ஒரு சில செய்திகள். இனிச்சுவையின் தோற்றத்தைப் பற்றி ஆராய்வோம். .

சுவைகள் யாவும், ஆடல் பாடல் முதலிய நாடக விளையாடல்களில் இருந்து தோன்றின என்பர் ஆசிரியர் தொல்காப்பியர். குறுநிலமன்னரும் முடியுடை வேந்தரும் நாடகமகளிர் இயற்றும் நவரசங்களுக்கும் இலக்காகிய ஆடல் பாடல் முதலியவற்றுள் தோன்றுவனவாகிய முப்பத்திரண்டு சுவை விரிவும் பதினாறு ஆகி அடங்கும் என்பது தொல்காப்பியர் கருத்து.

'பண்ணைத் தோன்றிய எண்.நான்கு பொருளும்

கண்ணிய புறனே நால்நான்கு என்ப.” .

r : (மெய்ப்பாட்டியல் 1) மொ-8 - .