பக்கம்:மொழியின் வழியே.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - மொழியின் வழியே!

(பண்ணை - ஆடல் பாடல் முதலிய விளையாட்டுக்கள்; எண் நான்கு - முப்பத்திரண்டு; நால்நான்கு - பதினாறு கண்ணிய -

கருதப்பட்ட புறன் - சுவைப்பொருளின் பகுதி)

ஆசிரியர் தொல்காப்பியர் எட்டுச் சுவைகளே கூறினார். சாந்தரசத்தை அவர் கூறவில்லை. சாந்தரசத்தைத் தமிழ் நூலார் 'சமனிலை என்று கூறுவர். 'சாந்தரசம் சாதாரண உலக மக்களிடத்தில் இல்லாமல் உலகியலிலிருந்து விலகித் தாம் வகுத்துக்கொண்ட குறிக்கோள் நோக்கிச் செல்லும் உலகியல் நீங்கினவர்களுடைய இயல்பு ஆதலால் அதைத் தொல்காப்பியர் கூறவில்லை என்பது உரைகாரராகிய பேராசிரியர் கருத்து. பேராசிரியர் கூறியவற்றைத் தவிர வேறு ஒரு சிறந்த முறையிலே ஆசிரியர் சமனிலைச்சுவை கூறாமைக்கு அமைதி கூற முடியும். பேராசிரியர் கூறுகின்ற படியே, உலகியல் நீங்கியசான்றோர் இயல்பாயின், சான்றாண்மை கல்வியால் வருவது. கல்வி, பெருமிதச் சுவையுள்ளே அடங்கும். அடங்கவே கல்வியாகிய பெருமிதம் உடையார் சமனிலை எனப்படும் சாந்தமாகிய நடுவுநிலை உடையவராகவே இருத்தல் வேண்டும். இல்லாதவரெனின் அவர்க்குப் பெருமிதம் ஒரு தலையாக இல்லை. ஆகவே, பெருமித மென்னும் ஆறாவது சுவையில் சமனிலையும் ஒராற்றான் அடங்குதலினால் தொல்காப்பியர் அதனைத் தனியே

கூறாராயினர் என்பது பொருந்திச் சிறக்கும். இனி,

"ஆங்கவை ஒருபாலாக ஒருபால் -

உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்.’

(தொல். மெய் 12)

என்னும் மெய்ப்பாட்டியலின் பிற்பகுதியிலுள்ள, பிற வகையால் வருகின்ற மெய்ப்பாடுகளைக் கூறும் சூத்திரத்தில் உலகியல் நீங்கினார் இயல்பாக, நடுவுநிலை' எனச் சமனிலைச் சுவையைக் கூறினார் எனினும் அமையும். இன்னும்