பக்கம்:மொழியின் வழியே.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 117

ஒதினார் எனல் சாலப் பொருந்தும். அல்லது கருணை அவலம் என இருகூறு செய்து பிறன்கோள் புலப்படுத்துவாராயினர் எனினும் அமையும். இனிவரல் என்பது இழிவுச் சுவை. இரக்கம் என்றாலும் ஒருவாறு இளிவரற்சுவையினைக் குறிக்கும். மருட்கை என்பது வியப்புச் சுவை. அற்புதம் என்று வழங்கப்படுவதும் இதுவே. அச்சம் என்பது பயச்சுவை. பெருமிதம் என்பதுதான் பிறத்தற்குரிய மிகுதி உண்டாய வழித் தோன்றுகின்ற வீரம். கல்வி வீரம், போர் வீரம், இசை வீரம், கொடை வீரம் என அது இந் நான்கும் நிலைக் களனாகப் பிறக்கும் இயல்பினது. இன்பம் பொருள் இவற்றின் பொருட்டுப் பழி வருவன செய்யாத புகழ் நிலையாம் இசையே எனப்படுவது. வெகுளி என்பது கோபச் சுவை. வடமொழியாளர் ரெளத்திரம் என்பதும் இதுவே. உவகை என்பது இன்பம் முதலியன காரண மாகப் பிறப்பதோர் மகிழ்ச்சி. முன்னதாகிய நகையோடு தொடர்புடையது உவகை. இவ்வெண்வகை மெய்ப்பாடுகளைச் சுவை, குறிப்பு என்ற பெயர்களாலும் கூறலாம் குறிப்பான் உணரப்படும் காரணமும் நெறிப்பாடும் உடைமையின். இனி நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என இவற்றை இவ்வாறு வரிசைப்படுத்திய ஆசிரியர் யாதானுமோரோர் காரணம் பற்றியன்றே வரிசைப் படுத்தியிருத்தல் வேண்டும். அக்காரணங்களை ஒருவாறு இப்போது உய்த்துணர முற்படுதல் வேண்டும்.

மெய்ப்பாடு எல்லாவற்றுள்ளும் புலப்படுதற்கண்விளக்க முடைமை பற்றியும், சிறந்தமை பற்றியும் விளையாடலின்கண் தோன்றிய முதன்மையோடு இயைபு உடைமை பற்றியும் நகைச் சுவையை முன்வைத்தார். இவ்வாறன்றி மேற்கிளந் தோதிய பொருளதிகாரத்து அகப்பொருட்கு நெருங்கிய தொடர்புடைமைபற்றியும் பொதுவாகப் புறப் பொருட்கும் ஒருவாறு சார்புடைமை பற்றியும் முதலில் வைத்தார் எனினும்