பக்கம்:மொழியின் வழியே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 119

வாழ்ந்த முற் செல்வ நிலை எண்ணி இளிவரற் காலத்துத் தமரொடு வெகுளலானும், அச்சக் காலத்துக் காரணமின்றி வெகுளலானும், அவலக் காலத்துத் தான் அவ்வவலமெய்தச் செய்தாரை வெகுளலானும் என இருமை நிலையினும் பிறப்பதால் இரண்டனுள்ளும் பட்டு அடங்கும் என்பது. ஆக இவ்விதமாய் ஏனைய ஆறும் தம்முள் அடங்குதல் என்னும் தலைமை கொண்டமையால் நகையே அழுகை' என இன்பியல், துன்பியலான அவ்விர்ண்டையும் முன் வைத்தார் என்பது. அழுகைக்குப் பின் இளிவரல் வைத்தது அழுகை வெளிப்படையாய் நிகழும் அவலமெய்ப்பாடு என்பதையும் இளிவரல் குறிப்பாற் புலப்படும் இரக்க மெய்ப்பாடு என்ப தையும் அறிவித்தற்கே ஆகும். ஏனெனின் இரக்கம் என்பதும் அழமாட்டாததோர் அவலநிலையேயாகும். அவ்வியைபு நோக்கியே அழுகையின் பின் இளிவரற்சுவை வைக்கப் பட்டது. இவர்க்கும் இவ்வவலம் வந்ததோ?' 'விதி கொடி தன்றோ?' எனவும், பாலும் கொழுங்கனியும் உண்டவாய் புற்கையும் உண்ண வந்ததோ?’ எனவும் அவலம் பற்றியும் இளிவரல் பற்றியும் வியப்புச் சுவை பிறப்பதாலும் அடுத்து நிற்கும் அச்சத்தின் காரணமாக இருப்பது பெரும்பாலும் வியப்புச் சுவையே ஆகலானும், அச்சத்திற்கும் இளி வரலுக்கும் இடையே வியப்புச் சுவை வைக்கப்பட்டது. முன்னர் உணர்த்தப்பட்ட அவலம், வியப்பு என்னும் இரு மெய்ப்பாடும் அடிப்பட நிகழ்தலானும், பின்னர் உணர்த்த இருக்கும் பெருமிதத்தோடு மாறுபட்டதாகலானும் அச்சச் சுவை வியப்பிற்கும் பெருமிதத்திற்கும் இடையே தந்துரைக் கப்பட்டது. மேற்கூறிய இளிவரல் அச்சம் என்னும் இரண்டு மெய்ப்பாடும் சிறிதுந் துணைப்படாவண்ணம் நிகழ்வதாலும் முன்னதாகிய அச்சத்தோடு மாறுகோடலானும், பிறர் கண்டு வியத்தற் காரணமாகிய வியப்புச் சுவைக்கு நிலைக்களனான கல்வி மிகுதி, கொடை மிகுதி முதலியன உள்ளதாகையாலும்