பக்கம்:மொழியின் வழியே.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 123

தொடரின் தழுவல். 'ஒரு நூறு என்னும் தொடர் தரும் - பொருளை நூறு” என்ற எண்ணுப்பெயர் ஒன்றே தரும். ஒன்றுக்கு மேற்பட்டால் சொல்லுக்கு முன், இரண்டு, மூன்று, என்று அடைமொழி அமைய வேண்டியதுதான், 'ஒரு நூறு” என்பதில் 'ஒரு' என்ற சொல் வீணான மிகைச் சொல். நீங்கள் மிகவும் மோசமானவர் - என்றாலே எழுவாயும், பயநிலையும், முடித்துக்காட்டுஞ் சொல்லும் சரியாக அமைந்த முழு வாக்கியமாம். இருக்கிறீர்கள்' - என்பது அநாவசியமான சொல். அருகில் என்ற பதமே பக்கத்தில் எனப் பொருள் படும். அருகாமை என்றால் தொலைவு. பிற மொழியிலிருந்து தனிச் சொற்களை அமைத்தலும், பயன்படுத்தலும் ஏற்றதாக இருப்பினும் பரீட்சார்த்தம், உத்தேச பூர்வம் - போன்று இருமொழியிணைந்து பிரியாது ஒரு தொடராய் நிற்கும் பிற மொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது.

இன்னும் அழகுக்காவது சில சொற்களுக்குப் பக்கத்தில், சில சொற்கள் உடன் தொடராமல் தவிர்க்க வேண்டும். அப்பொருள் இப்பொருளைவிடச் சிறிது பெரிது. இந்த வாக்கியத்தில் சிறிது பெரிது என்ற முடிப்பில் இரண்டு சொற்களும் ஒன்றோடொன்று இணையத் தயங்கி இணங்காமல் விட்டிசைத்து நிற்பது தெரியவில்லையா? 'சற்றுப் பெரிது’ என்றோ சற்றே பெரிது’ என்றோ இருந்தால் அழகாகப் பொருந்தும். - . .

அப்படிச் செய்யாமற். போயிருந்தால் நன்றாகவில்லா மலிருந்திருக்கும். - என்று ஒரு வாக்கியம். இதில் முன்னும் பின்னும் சொற்கள் அழகாகச் சேரவில்லை. செய்யாமற் போயிருந்தால் இல்லாமலிருந்திருக்கும் இரண்டு இடங்களிலுமே வார்த்தைகள் ஒட்டாமல் நலிந்து அழகு குன்றி முரண்பட்டு ஒலிக்கின்றன. இல்லாமலிருந்திருக்கும்; இருந்திராது" - என்ற தொடர்களில் உடன்பாடும், எதிர்