பக்கம்:மொழியின் வழியே.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மொழியின் வழியே

மறையும் அருகருகே நின்று தண்ணிரும், எண்ணெயும் போல ஒட்டாமலிருக்கின்றன.

'திருட்டுக்காகத்தான் திருடன் திருடுகிறான்' என்பது சரியல்ல. ஒரே சொல் திரும்ப வருவது செய்யுளில் அணி. வசன நடையில் பொருளின் மந்த கதிக்கு அதுவே காரணம். 'அவனவன் அவனவனுடைய காரியத்தை அவனவன் பாட்டுக்குக் கவனித்துக்கொண்டு போக வேண்டும்? - என்று எழுதுவதில் சொல் அடுக்கிக் கொண்டு முடுக்கினாலும் பொருள் தயங்கித் தேங்கி மந்தப்படுகிறது.

உணர்ச்சி வாக்கியங்கள், வினா வாக்கியங்கள், வியப்பு வாக்கியங்கள், - என்று இத்தகைய வாக்கியங்களில் புதிய நடைகளையும், புதிய குறியீடுகளையும், மேற்கொள்வதாக எண்ணிப் பிறழ்ந்த முறைகளை மேற்கொள்கின்றனர் சிலர்.

ஆம், வாழ்ந்து கெட்டவள்தான் அந்த வனிதை' பஞ்சைப் பராரிகளை ஏய்க்கும் பண்க்காரக் கூட்டத்தில் கஞ்சிக்கு உழன்று கட்டழிந்தவள்தான். ஆம்! கட்டழிந்து கெட்டலைந்து சீரழிந்தவள்தான் - -

காற்படி அரிசியில் காலே அரைக்கால்படி கல் கலந்து கிடக்கிறமாதிரி, ஒரே ஆச்சரியக் குறிகளையும் ஆம்களையும், 'தான்களையும் காணமுடிகிறதே ஒழிய நேர்மையான கொதிப்பின், நியாயமான வார்த்தைச் சாயலே இல்லை. ஆனால், இந்த நடைதான் இன்று பெருகி வருகிறது. புகழத் தக்கது; புகழுங்கள் - என்று அதனை எழுதுகிறவர்களாலேயே வற்புறுத்தப்பட்டும் வருகிறது. -

'நான் அவனுக்கு முன்னாலேயே சொன்னேன் நீ இந்தக் காரியத்தைச் செய்திருக்கக் கூடாதென்று. - இந்த வாக்கியம் வேறு ஏதோ ஒரு மொழியில் நினைத்துக் கொண்டு தமிழில் சொன்னமாதிரி இருக்கிறது. வினை முற்றுக்கள் முடிக்கு