பக்கம்:மொழியின் வழியே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மொழியின் வழியே!

மிகவும் பழைய நடை

தறி கெட்டு மனம் போன போக்கில் வளரும் புதிய நடையைக் கண்டிப்பது தவிர, புதர்மண்டிப் பாழடைந்து போன ஒருவகைப் பழைய நடைக்கும் புத்துயிர் அளிக்க வேண்டியிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டுக் காலமாகப் பாடப் புத்தகங்கள் என்ற பேரில் மாற்றமோ, மறுமலர்ச்சியோ, இல்லாமல், உண்டுபண்ணிக்கொண்டு வருகிற தலைவலியைத் தான் சொல்லுகிறேன். 1925-வது ஆண்டிலிருந்து இன்று வரை வெளிவந்துள்ள பெரும்பாலான தமிழ்ப் பாடப்புத்தகங்களில் ஒரு மூவாயிரம் தமிழ் வார்த்தைகள் தாம் திரும்பத் திரும்ப இடம் மாற்றி உபயோகிக்கப்பட்டிருக்கின்றனவோ என்று நான் சந்தேகப்படுகிறேன். மொழியில் உள்ள அழகும் நளினமும் பொருந்திய எத்தனையோ நல்ல வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. ஒரே மாதிரியான ஆரம்பம், ஒரே மாதிரியான வளர்ப்பு, ஒரே மாதிரியான முடிப்பு, - ஆகிய பாடப்புத்தக சம்பிரதாயங்களை எந்தப் பாடப் புத்தக ஆசிரியரும் மாற்ற முயற்சி செய்யவில்லை. வாக்கிய அமைப்புக்களும் இந்தக் கால் நூற்றாண்டாக ஒரே மாதிரித் தான் இருந்து வருகின்றன. கால் நூற்றாண்டு என்ன? அறுபது நூற்றாண்டுகள் கழிந்தாலும் ஆமணக்கு விதைகளைப் பிழிந்தால் விளக்கெண்ணெய் தானே வெளிவர முடியும்? என்பது போலிருக்கிறது. இந்த நிலை. இந்த நிலை மாறி அழகும், நளினமும், உள்ள வளமான பாடப் புத்தகங்கள் கிடைக்கவேண்டுமானால் வெளியே இருந்துகொண்டு அழகு கொழிக்கிற நல்ல எழுத்துக்களை உருவாக்கும். தமிழ் நன்கு அறிந்த எழுத்தாளர்கள் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் எழுதவேண்டும். தமிழ் நாட்டில் மாணவப் பருவத்திலேயே மொழித் துறையில் விழிப்பும் அறிவுக் கூர்மையும் அடைய முடியாமல் மந்தபுத்தியை உண்டாக்கிய திருப்பணியில் முக்கால்வாசிப் பங்கு தேய்ந்துபோன ஒரே பாதையில் ஒரே