பக்கம்:மொழியின் வழியே.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. மொழியும் பொறுப்புணர்ச்சியும்

புதிய விழிப்பு -

பழைய இலக்கியங்களைப் பற்றியும், புதிய இலக் கியங்களைப் பற்றியும் ஒருங்கே புதிய விழிப்பொன்று ஏற்பட்டிருக்கும் காலம் இது. முன்பு புரிவதற்கும், புரிந்து கொள்ள முயல்வதற்கும், அருமையாயிருந்த நூல்களும், இலக்கிய இலக்கணச் செய்திகளும் இப்போது எளியனவாகி யிருக்கின்றன. அந்தத் துறையில் தேர்ந்த அறிவும் பயிற்சியும் உள்ளவர்கள் பேச்சினாலும் எழுத்தினாலும், இந்தப் புதிய விழிப்பை உண்டாக்கியுள்ளனர். பல நாட்களாகப் பலர் முயன்ற முயற்சியின் விளைவு இது. இந்த விளைவை நல்ல முறையில் பயன்படுத்திக் காக்க வேண்டும். அவ்வாறு காப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? இவ்வினாக்களுக்கு விடை காணும் முனைப்பே இச்சிறு கட்டுரை.

விழிப்பு ஏற்பட்ட பின்பும் சிறுபொழுது தடுமாற்ற மிருப்பது இயற்கை. ஒளிவந்த பின்னரும் கண்கள் கூசுவதுண்டு. கண்களை மலர்த்தி விழித்தெழுந்தவன் சோர்வினால் தடுமாறி உறக்கத் தளர்ச்சியோடு சுவரில் மோதிக் கொள்வதுபோல் அறிவுச் சோர்வால் பொறுப்பிழந்து விடக்கூடாது. நிலையின் இழிந்துவிடக் கூடாது. நிறையினை இழந்துவிடக் கூடாது.

'தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை” - . . . என்ற குறள் ஒழுக்க நிலையை வற்புறுத்துவதற்கே அன்றி, இலக்கியத்துக்கும் பொருந்தும். பொது வாழ்வில் பொறுப்புணர்ச்சி குன்றியவன் தன் நிலையிலிருந்து இழிந்து விடுவது போல இலக்கியத்தில் படைப்போர், படிப்போர் மொ 9 - -