பக்கம்:மொழியின் வழியே.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மொழியின் வழியே!

ஆகிய இரு பாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும்போது தம் நிலையிலிருந்து தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர். அறியாமையே நிறைந்த மக்கள் அறியாமற் செய்கின்ற பிழைகள் தரைமேல் நடப்பவன் தடுக்கி விழுவது போல் இயல்பானது, குறைந்த விளைவு தருவது. ஆனால் அறிவுள்ளவன், அறிவிருந்தும், பொறுப்பின்றிச் செய்யும் பிழைகள் மலைமேல் ஏறிக்கொண்டிருப்பவன் தடுக்கி விழுவதுபோல அஞ்சத்தக்கது, அருந்துயர் தருவது, அநுதாபப் பட முடியாதது. வளர்ச்சியின் வழியில்

படிப்படியாக இயல்பாக வளராமல் தன்நிலை மீறிய விரைவில் வளரும் போது அந்த வளர்ச்சியே ஒருவகை நோயாகிவிடுகிறது. தலையளவிற் சுருங்கித் திரண்டு அழகிய தாகத் தோன்றினால் வெண்சங்குபோல் நல்ல கழுத்து' என்று கழுத்தைப் புகழ்கிறோம். கழுத்து தலைப் பருமனுக்கும், தலை கழுத்தின் பருமனுக்குமாக ஒரு விகாரப் பிறவியைக் காண்பதாகக் கொள்வோம். அப்போது, அந்தக் கழுத்து அளவு மீறிப் பருத்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை வளர்ச்சி என்று ஒப்புக்கொள்ள இயலுமோ? அந்த வளர்ச்சியே நோயல்லவா? உடலின் உறுப்புக்களில் எந்தெந்த உறுப்பு எவ்வெக்காலத்து எவ்வளவில் வளர்ந்தமைய வேண்டு மென்று ஒரியற்கைப் பொறுப்புத் தன் போக்கிலே செயற் பட்டு வருகிறது. அந்தப் பொறுப்பை விஞ்சிய மிகை வளர்ச்சி நோயாவதுபோலப் பொறுப்பின்றி வளரும் அல்லது வளர்க்கப்படும் இலக்கியமும் மொழிக்கு நோயாகும். தனித் தனி வளர்ச்சிகள் ஆரோக்கியமன்று. யாவுமே ஒரு சீராக வளர்ந்த நிலையே ஆரோக்கியம்.

யார் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரை