பக்கம்:மொழியின் வழியே.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 133

இலக்கியத்தில், மலையாள மொழியில், மராத்தியில் இவை போல் இன்னும் சில இந்திய மொழிகளில், மனத்தின் ஆழத்தைத் தொட்டுப் பதியும் உயர்தரமான வாழ்க்கை உண்மைகள், கதைகளாக்கப்பட்டுள்ளன. கதைக்குத் தேர்ந் தெடுக்கப்படும் வாழ்க்கை அல்லது அதன் ஒரு பகுதி தன்னிகரில்லாத் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும். தண்டியாசிரியர் பெருங்காப்பிய இலக்கணங் கூறி முடிக்கும் போது, 'நன்னடைத்தாகிக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப" என்று வரையறுக்கிறார் அல்லவா? அந்த வரையறை கதை இலக்கியம் போன்ற புதுத்துறைகளுக்கும் வேண்டும். பொழுது போகாத பொறுப்பிலிகள் சிலர் பொழுதை எப்படிப் போக்குவதென்று தெரியாத பொறுப்பிலிகள் பலர்க்கு எழுதுவதே கதை இலக்கியம் என்ற நிலையை மாற்ற வேண்டும். அறிவும், சிந்தனையும் வளர்ந்து வருகிற சமுதாயத்தில் அந்த வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் இலக்கியங்கள் தேவை. தேவையை நினைவுபடுத்திப் பொறுப்பை உண்டாக்குவது அறிஞர் கடமை. பயிரின் தரத்துக்கேற்ற நிலம் வேண்டும். அதை நாம் தேடுவோம். எதிர்கால இலக்கியம்

வளர்ந்து கொண்டிருக்கிற தமிழ் இலக்கியம் எதிர் காலத்தில் இன்னும் சிறந்த வளர்ச்சியைப் பெறும். பெற வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு இருக்கிறது. ஆனால், அந்த வளர்ச்சி உண்மையிலேயே தமிழ்மொழியின் ஆக்கத்திற்கு வழிகோல வேண்டும்; வாய்ப்பளிக்க வேண்டும். ..

கதைகள் மட்டுமே குறிக்கப் பெறுகின்றனவே என்று எண்ண வேண்டாம்; புதுமைக் கவிதை, புதுமைக் கட்டுரைகள், புதுமை நாடகங்கள், ஆகிய புதுமை இலக்கி யத்தின் ஒவ்வொரு துறையையும் ஆக்குவோர் படிப்பும் பண்பும் பொறுப்புணர்ச்சியும் பெறவேண்டும். ஏற்கெனவே