பக்கம்:மொழியின் வழியே.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மொழியின் வழியே!

அவற்றைப் பெற்றிருப்பவர்களை வாழ்த்தவும் வணங்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்றையவை யாவற்றிலும், மேல் எழுந்து நின்று புதுமை இலக்கியப் பரப்பு முழுவதும் நிறைத்திருப்பவை கதைகளும், நெடுங் கதைகளுமே யாவன. எனவேதான் அவற்றைப் பற்றிச் சற்று விரிவாக இங்கே சொல்ல நேர்ந்தது. இற்றை நாட்களில் எந்தெந்தத் துறைகளுக்குக் கதைகள் தேவைப்படுகின்றன என்று பார்க்கலாம். ஒவ்வொரு திங்களும் வார இதழ்களுக்கு நூற்றுக்கணக்கான கதைகள் தேவைப் படுகின்றன. திங்கள் இதழ்களுக்கும் கதைகள் தேவை. மேடை நாடகங்களுக்கு நல்ல கதைகள் தேவை. திரைப்படங்களுக்கு நல்ல கதைகள் தேவை. பதிப்பகங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்து விரைவில் பணம் திரட்டக் கதைகள் தேவை. இழிந்த கொலை, கொள்ளை, காமச் செய்திகளைப் பேசும் கதை நூல்களே விரைவாகச் செலவழிகின்றன என்று புத்தகக் கடைக்காரர்கள் கூறுவதி லிருந்து இந்த நாட்டில் எழுதுபவர்களும், படிப்பவர்களும் எவ்வளவிற்கு பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்களென்று தெரியவில்லையா? -

மற்ற நாடுகளிலும், மற்ற மொழிகளிலும், முறையாகச் சிறுகதை, நெடுங்கதைகளை, எழுதிப் பொறுப்பும், பயிற்சியும், கைவந்தவர்களே, திரைப் படத்துக்கு எழுதுகின்றனர். ஆனால், இங்கோ முற்றிலும் மாறான நிலை நிலவுகிறது.

முறைப்படி பொறுப்புடன், எழுதத் தெரியாமல் அறிவுலகில் தோற்றவர்களும் அத்தோல்வியையே கருவியாகக் கொண்டு திரையுலகை ஆள்கின்றனர். திரையுலகில் அறிவுடை மையாகத் தோன்றும் செய்திகள் பொதுவாழ்வில் சான்றோர் களால் விரும்பப்படாதவையாயிருக்கின்றன. பொது வாழ்வில் சான்றோர்களால் விரும்பப்படும் பண்புகள் திரையுலகில்