பக்கம்:மொழியின் வழியே.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 135

அறியாமையாக இகழப்படுகின்றன. அரசியல் வாழ்வில் படித்தோர், படியாதோர், எல்லோரும் ஒட்டுரிமை பெறலாம். அறிவுலகில் சீர்தூக்கும் உரிமை அறிவுடையவருக்கு மட்டுமே உரியது. திருக்குறளைப் படித்துணர்ந்து தேர்ந்தவர்தாம் அதுபற்றி விவாதிக்கத் தகுதியுடையவர். படித்தவரோ, படிக்காதவரோ, எல்லோருக்கும் உரிமை உண்டு என்னும் குடியரசு முறை அறிவுலகில் செல்லாது.

எழுத்தாளர்களுக்கு

ஆகவே, எழுத்தாளர்களே! ஒவ்வொரு துறையிலும் நீங்கள் பொறுப்புள்ளவர்களாக - பொறுப்பைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக - இருக்கிறீர்கள் என்பது நினைவுறுத்தப் படுகின்றது. படித்தவர்கள், பண்பட்டவர்கள், நல்லவர்கள், கையிலெடுத்துப் பார்க்கவும் கூசும் இழிந்த இலக்கியங்களை உங்கள் கைகள் படைக்க வேண்டாம். கண்கள் நோக்க வேண்டாம்.

உங்களுக்கு முன்புள்ள பெரும் புலவர்களும், கதைகளை எழுதியிருக்கிறார்கள். சிறு காப்பியம், பெருங் காப்பியம் என்று பகுத்துக்கொண்டு உயரிய உறுதிப் பொருள்களை மையமாக வைத்துக் கவிதை நடையில் எழுதியிருக்கிறார்கள் அவர்கள். அதே செயலை அதனினும் சிறிய அளவில், எளிய முறையில் எளிய உண்மைகளை அமைத்து எல்லோருக்கும் பயன்படும் உரைநடையில் எழுதி வருகிறீர்கள் நீங்கள். இன்னும் விரிந்த அளவில் எதிர்காலத்தில் புதுமை இலக் கியத்தை வளர்க்கப் போகும் பொறுப்பும் உங்களைச் சார்ந்திருக்கிறது. பழைய இலக்கியங்களையும், இலக்கண வரம்புகளையும், மரபுகளையும் புறக்கணிக்காதீர்கள். ஒரு மனிதன் வயதானதன் தகப்பனிடத்தில் அதிகக் கொடுமையாக நடந்துகொண்டானாம். வேளா வேளைக்கு உடைந்த சட்டியில் அவருக்கு உணவு கொடுத்து மனத்தைப் புண்படுத்தினானாம்.