பக்கம்:மொழியின் வழியே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மொழியின் வழியே!

ஒரு நாள் அந்த உடைந்த சட்டியைக் காணவில்லை. அவன் தேடினான். தந்தையைக் கொடுமைப்படுத்திய அந்த மனித னுடைய மகன் ஓடிவந்து, 'அப்பா அந்தச் சட்டியை நான் தான் ஒளித்து வைத்திருக்கிறேன். தாத்தா இறந்துபோனபின் உங்களுக்கு நான் சோறு போடுவதற்காக அதைப் பத்திரப் படுத்தினேன்” என்றானாம். இந்தக் கதையில் வரும் கொடுமைக் காரனுக்குத் தந்தையை அவமதித்ததனால் நேர்ந்த மரியாதை தான் பழந்தமிழ் இலக்கியத்தை அவமதிக்கும் புதுமை எழுத்தாளர்க்கும் ஏற்படும். பழைய இலக்கியத்தை அவமானம் செய்தால்தான் புதுமை இலக்கியத்தை வளர்க்க முடியுமென்று நினைப்பது பிழையான அநுமானம்.

முந்தைத் தலைமுறையின் அறிவைப் போற்றவும், மதிக்கவும் தெரியாவிட்டால் பிந்தைத் தலைமுறையின் போற்றுதலும், மதிப்பும் உங்களுக்கு எய்தாது. தமிழ் எழுத்தாளர்கள் இவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வளமும், காலத்தை எதிர்த்து நிற்கவல்ல உண்மை ஒளியும், பொறுப்புமுள்ள புதுமை இலக்கியத்தை உருவாக்குங்கள். பொறுப்பின்றிக் குழந்தைகளைப் பெறுவதை யாவது மனித இனத்தின் பொதுவான பலவீனம் என்ற பெயரில் மன்னிக்கலாம். பொறுப்பின்றிக் கருத்துக்களைப் பெறலாமா? பெறுவதை மன்னிக்கலாமா? 口