பக்கம்:மொழியின் வழியே.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. மொழியும் அறநூல்களும்

வித்துப் போன்றது

கோவில்களும், அவற்றின் விண்ணுயர் கோபுரங்களும் நம் இறைவுணர்வுக்கு அடையாளமாகலாம். சிற்பங்களும், சித்திரங்களும், இன்னும் எண்ணற்றிருக்கும் நளின நற் கலைகளும் நம் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாகலாம். என்றோ தோன்றி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் காவியங்களும், கவிதைகளும், இலக்கியங்களும் நமது அறிவுத் திறனுக்குச் சான்றாகலாம். -

ஆனால், இத்தனை நூற்றாண்டுகளாகப் பழுத்துப் பயன் பட்டு, முற்றி, முதிர்ந்து, நம் வாழ்க்கையோடு வாழ்க்கையாகக் கலந்து நல்லவற்றை விரும்பவும், தீயவற்றை வெறுக்கவும், கற்றுக்கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? வாழ்க்கையும், உணர்வுகளும் இன்றைய வேகத்தோடு போட்டியிடமுடியாது தவிக்கும் இந்த நாளிலும்கூட நமக்கு அறத்திலும், ஒழுக் கத்திலும் நம்பிக்கை போய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே என்பதில் ஐய மில்லை. . . . . . .

அந்தப் பழைமையான அறநூல்களின் கண்டிப்பான கருத்துக்களிலிருந்தும், அழுத்தமான விதிவிலக்குக்களிலிருந்தும், நாம் நழுவியும், விலகியும், வெகு தொலைவிற்கு வழி தவறி வந்துவிட்ட போதிலும் அவற்றின் தோற்றம் நம் கண்களை விட்டு விலகிவிடவில்லை என்றே நான் நம்புகிறேன். அற நூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயிர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், கவிதைகள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்