பக்கம்:மொழியின் வழியே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மொழியின் வழியே!

வானம் அறிந்த - தனைத்தும் அறிந்து

வளர் மொழி வாழியவே' என்று பாரதி தமிழ் மொழியின் அளப்பரிய சொற்பரப்பிற்குச் சான்று கூறும் விளக்கமாகப் பாடி வைத்திருக்கின்றான். மண்ணுலகை நிழற்றி நிற்கும் வானத்தின் ஆட்சிக்குட்பட்ட உலகியற் பொருள்கள் யாவற்றையும் தன் சொற்பரப்பால் அளக்கும் வண்மை பெற்ற மொழி தமிழ் என்பது கவிஞன் கருத்து. இன்றோ சிலர் தமிழில் ஏதோ சில கலைகளுக்குச் சொற்களில்லை என்று மயங்கியுரைத்துத் தம்மறியாமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அது பிழையன்றோ?

ஆகவே மொழியின் பண்பாடு மரபு, இலக்கணம், வழக்கு, இலக்கியம் ஆகிய இவற்றாலும், இவை காரணமாக எய்தும் தூய்மையாலும் நிர்ணயிப்பதற்குரிய ஒன்றென்று அறிய முடிகின்றது. தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் அந்த ஒன்று நிறைந்தே இருக்கிறது. 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/14&oldid=621359" இலிருந்து மீள்விக்கப்பட்டது