பக்கம்:மொழியின் வழியே.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 139

'அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமென்ப தியாவரும் அறிகிலார்." என்று இப்படிச் சொல்லி அறத்தின் பயனைத் தன்னொடும் தன் சமயத்தொடும் மட்டுமே சார்பு படுத்தி உரைப்பது சமய நூல்.

நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் குறைவிலன் எனக் கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினாள். என்று கோசலையோடு சார்த்தி வேற்றுமையில்லா அன்பின் நலத்தைக் கம்பன் கூறும்போது ஒரு கதையில், ஒரு இடத்தில், ஒரு கதாபாத்திரத்தோடு, சார்பு படுத்தி அறம் உரைக்கப் படுகிறது. இது இலக்கியம். -

எனவே, 'அன்பு' என்னும் அறத்தைப் பற்றி அற நூல் சொல்லும்போது அன்பை ஒரு தூய அறமாக எல்லோருக்கும் பயன்படுகிற விதத்தில் சொல்லி முடிக்கிறது. 'அன்பு' என்னும் பொது அறத்தைப் பற்றிச் சமயநூல் கூறும்போது தன் சமயத்தோடும், தன் சமயக் கடவுளோடும் தொடர்புறுத்திக் கூறுகிறது. காவியமோதன் கதையுடனும் கதாபாத்திரத்துடனும் தொடர்புபடுத்திக் கூறுகிறது.

பத்துப் பன்னிரண்டு பூக்கடைகள் இருக்கிற ஒரு வீதியின் வழியாக நடந்து செல்லும் பொதுவான மனிதனுக்கு எல்லாப் பூக்களிலிருந்தும், எல்லாப் பூக்கடைகளிலிருந்தும், மணம் வருவது போன்றது அறவுணர்ச்சி. -

அந்தப் பத்துப் பன்னிரண்டு பூக்கடைக்காரர்களும், என் பூக்கள்தாம் நல்லவை' என்பூக்களுக்குத்தான்மணம் அதிகம், 'என் பூக்களையே வாங்கிக்கொண்டு செல்லுங்கள் - என்று தனித்தனியே கூவி அழைப்பது போன்றது சமயவுணர்ச்சி. தத்துவ உணர்வு .

மேலே கூறிய அறவுணர்ச்சியும், சமயவுணர்ச்சியும் இணைந்து, இரண்டிலும் கலந்து நடுநிலைமையோடு