பக்கம்:மொழியின் வழியே.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மொழியின் வழியே!

தெளிவு பெற்ற உணர்வு ஒன்றுண்டு. அதுவே தத்துவ உணர்வு. சால்போடு தொடர்பு பெற்று வருவது அந்த உணர்வு.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றே பிறர்தர வாரா' என்கிற மாதிரிப் பொதுவாகச் சொல்லுவது தத்துவ உணர்வு. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, கீழ்த்திசை நாடுகளின் தத்துவ உணர்வே அறங்களும், சமயங்களும், இணைந்த இணைப்புத் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. பாலும் தேனும் கலந்தாற் போல அறவுணர்ச்சியும், சமயவுணர்ச்சியும் கலந்து உருவான அற்புத ஞானத்தினால்தான் கீழ்த்திசைத் தத்துவக் கலையில் இவ்வளவு அழகும், சுவையும், உருக்கமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

'அன்பு அறத்தைப்பற்றி இலக்கியம் கூறும்போது தன் கதையோடும், கதாபாத்திரத்தோடும் தொடர்புபடுத்தி உலகத்துக்குச் சொல்லுகிறது. -

அறநூலைப்போல் அறத்துக்காகவே அறத்தைச்சொல்லும் சிறப்புச்சமய நூலுக்கும், இலக்கியத்துக்கும் கூடக் கிடையாது. தத்துவ உணர்வு எதிலும் பட்டுக் கொள்ளாமல் நடுவாகச் சிரித்துக்கொண்டே நடந்து போவதைப்போன்ற சால்புநிலை.

வாழ்க்கைக்கு அறவுணர்வும் வேண்டும். சமய உணர்வும் வேண்டும். தத்துவ உணர்வும் வேண்டும். ஆனால், அற வுணர்வு கலவாத தனிச் சமய உணர்வு நாளடைவில் வெறியாக முறுகிப் போய்விடுகிறது. எல்லாச் சமயங்களிலும் உள்ள நல்லனவற்றை எடுத்துக்கொண்டு, எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கடைப்பிடித்து நன்றாக வாழலாம். நமது அற நூலாசிரியர்களில் திருவள்ளுவர் கடைப்பிடித்த அறம் இது தான. -

'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’