பக்கம்:மொழியின் வழியே.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மொழியின் வழியே!

தங்கள் வீட்டு வாசலை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வ தென்று வந்தால் எல்லோருக்கும் பொதுவாகவும், நடுவாகவும் இருக்கிற வீதியை யார் சுத்தமாக வைத்துக்கொள்வது?

ஒவ்வொருவருடைய வீடும் சுத்தமாக இருப்பதுடன் எல்லா வீடுகளும் அடங்கிய வீதியும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் சமய அறங்களைப் போற்றிக் காப்பதுடன், எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அறங்களையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

சைவத்தை ஆதரித்து அறங்களைச் சொல்லவில்லை என்பதற்காகச் சைவர்களும், வைணவத்தை ஆதரித்து அறங் களைச் சொல்லவில்லை என்பதற்காக வைணவர்களும் . கிறித்தவ சமயத்தைத் தழுவிப் பேசவில்லை என்பதற்காகக் கிறித்தவர்களும், அதே காரணத்துக்காக முகம்மதியர்களும், திருக்குறளையும், நீதிநெறி விளக்கத்தையும், ஆசாரக் கோவையையும் - புறக்கணித்தால் என் செய்வது தத்தம் வீடுகளைத் துய்மையாக வைத்துக் கொண்டு வீதியைக் கவனிக்காமல் விட்டுவிடுவதுபோல் நன்றியற்ற செயலாகும் இது. - பொது அறம்

அறமும், ஒழுக்கமும் எல்லாச் சமயங்களுக்கும் பொது. அவற்றை விவரிக்கும் அற நூல்களும் எல்லாச்சமயங்களுக்கும் பொதுவானவை. சமய உணர்வு அளவற்றுப் பெருகியிருந்த காலத்தில் தமிழ் மக்கள் ஒரொருகால் இந்தப் பொது உண்மையை மறந்திருந்தனர். இல்லாவிட்டால் திருக்குறள் போன்ற பொது அற நூல்கள் இதற்குள் நாட்டில் எவ்வளவு நன்றாகப் பரவி யிருக்க வேண்டுமோ, அவ்வளவு நன்றாகப் பரவாமற் போயிருக்குமா? -

தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாக இந்த ஒரு குறை இருந்து வந்திருப்பதை வரலாற்றை அடியொற்றியே கண்டு

கொள்ள முடிகிறது. -