பக்கம்:மொழியின் வழியே.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மொழியின் வழியே!

நமது பெருமை

சமயமும், இலக்கியமும் பயிர் செய்யும் நிலங்களைப் போன்றவை. பொதுவான அற நூல் என்ற விதை நெல்லை விதைத்த பின்புதான் இவற்றில் விளைவு ஏற்பட முடியும். தொடர்ந்து என்றென்றும் நல்ல விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று நாம் விரும்புவோமானால் அற நூல்களாகிய விதை நெல்லைப் போற்ற வேண்டும், பேண வேண்டும். நல்வினை வயமாகத் தமிழர்களுக்கு இத்தகைய சமயச்சார்பற்ற பொது அற நூல்கள் நிறைய இருக்கின்றன. முகம்மதியத் தமிழர், கிறித்தவத் தமிழர் - எவரும் படித்துக் கடைப்பிடிக்க ஏற்ற அறங்களைப் பொதுவாக வகுத்துக் கூறும் அற நூல்கள் இவை. இவற்றுள் தலை சிறந்தது திருக்குறளாகும். இப்படிப்பட்ட அற நூல்களைப் பெற்றிருப்பதற்காக நாம் நிச்சயமாகப் பெருமைப் படலாம். சமயங்களின் சார்பில் Gw TLD Gij Gl L1T5i -optère, GoGiTô (Common Ethics of Life) கூறும் நூல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உண்டாக்கி வைத்துக்கொண்டிருப்பது தமிழ் மொழிக்கே சிறப்பு. -

நாகரிகமும், அறிவியலும் வளர்ந்து தனித் தனிச் சமய உணர்வுகள் குன்றிப் பொதுவான அறவுணர்வுகளால் உலக மனிதர்கள் உறவுகொள்ள வேண்டுமென்று அறிஞர்கள் விரும்புகிற நூற்றாண்டு இது. இந்த உலகளாவிய பொது வாழ்வின் பொது அறங்களையும், பொது ஒழுக்கங்களையும் தொகுத்து, நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குறளை ஒத்த நூல்களாகச் செய்திருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது எவ்வளவு இறும்பூது கொள்ள முடிகிறது. நாம் தமிழர் களாகப் பிறந்ததற்காகப் பெருமைப் படுவதைவிட அதிகமான பெருமையை அறத்தினின்றும், ஒழுக்கத்தினின்றும் வழுவிப் போகாமல் வாழ நமக்கு உதவ இத்தனை அற நூல்கள் உள்ளன என்பதற்காகவே

玄の - அடையலாமே.