பக்கம்:மொழியின் வழியே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மொழியின் வழியே!

சுவை பெருகும் பால்போலத்தான் மொழியும். நாட்டின் இயற்கை, செல்வம், விளைவு முதலிய வளங்களும், சூழ்நிலையும் ஆகிய இவைகளுங்கூட நுணுகி ஆராய்ந்து பார்க்குங்கால் ஒரளவு மொழி வளர்ச்சிக்கும், அதன் முன்னேற்றத்திற்கும் காரணங்களாக அமையக்கூடிய தகுதிகளைப் பெறுகின்றன. நூற்றுக்குத் தொண்ணுாறு விழுக்காடு உடல் உழைப்பால் வாழும் மக்களைக்கொண்ட நாட்டில் எஞ்சிய பத்து விழுக்காடு மக்களுக்கே மொழியைப் பற்றியும், மொழியின் முன்னேற்றத்தைப் பற்றியும் எண்ணுதற்கு நேரமிருக்கிறது. எனவே, நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையும் ஒரளவு மொழியின் வளர்ச்சிக்கும், வளர்ச்சியின்மைக்கும் காரணமாக அமையத்தான் செய்கிறது. மொழியைப் பற்றிச் சிந்திப்பதற்கென்று சிறிதளவும் நேரமில்லாத பொருளாதாரக் குறைவுள்ள மக்கள் வாழும் நாட்டில் மொழி எங்ங்னம் முன்னேற முடியும்? பண்டைத் தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் முன்னேற்றத்தையே எந்நேரமும் கருதும் புலவர்களும் புரவலர்களும் இருந்தனரென்றால் அன்றைய நாட்டில் பொருளாதார வளம் ஓங்கிப் பாங்குற்றிருந்ததே காரணம். அன்று மொழிக்கென்று பலருடைய வாழ்வு செலவிடப்பட்டது. தொல்காப்பியர் வாழ்ந்த பெருவாழ்வின் பயன்தான் இன்றைக்கு வாழ்கின்ற தமிழ். எனவே, ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்கவேண்டும். அது வளர்ச்சிக்கு முதறகாரணம. - - .

இனி மொழியின்தோற்றத்தைப் பற்றியும் எழுத்துக்களின் தோற்றத்தைப் பற்றியும் சிறிதளவு விவரிப்போம்.

'மொழிமுதற் காரணமாம்

அணுத்திரள் ஒலி எழுத்து , 3 × அது முதல் சார்பு எனவிரு வகைத்தே'

(நன்னூல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/16&oldid=621361" இலிருந்து மீள்விக்கப்பட்டது