பக்கம்:மொழியின் வழியே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 15

மொழிக்கு முதற்காரணம் அணுத்திரள் ஒலி. அவ்வணுத்திரள் ஒலியினைக் காரணமாகவுடைய மொழியின் காரியம் எழுத்து. எழுத்தின் காரணம் மொழி. வரிவடிவெழுத்து ஒரு மொழிக்கு இன்றியமையாதது என்பதை நமது இலக்கண நூல்கள் தக்க சான்றுகளோடு பொருத்தமுற விளக்குகின்றன. அவை வருமாறு:- -

"கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும் சட்டகம் போலச் செவிப்புல வொலியை உட்கொளற் கிடும் உருபாம் வடிவெழுத்தே'

(அகத்தியம்) காணப்பட்ட உருவம் எல்லாம் மாணக்காட்டும் வகைமை நாடி வழுவில் ஒவியன் கைவினைபோல எழுதப்படுவது உருவெழுத்தாகும்

(யாப்பருங்கல விருத்தி)

கண்ணுக்குப் புலனாகாத கடவுளுக்கு வடிவு முதலியவற்றால் மக்கள் உருக்கொடுத்து வழிபடுவதுபோலவும், கண்ணுக்குப் புலனாகின்ற உருவங்களை வெளிப்பட விளக்கும் ஒவியங்கள் போலவும், செவிப்புலனாகின்ற ஒலியைக் கட்புலனாகின்ற உருவாகக் காட்டுவதே வடிவெழுத்தாம். ஆகவே, ஒரு சிறந்த மொழியின் குன்றாத முன்னேற்றத்திற்கு அதன் எழுத்தமைப்பும் காரணமாக அமைகிறது என்பது யாவராலும் மறுக்க முடியாத தொன்று. இவ்வாறு தோன்றிய எழுத்துக்கள் ஒன்றும் பலவும் தம்முட் கூடும் கூட்டமே மொழி. ஒரெழுத்தாலேயே ஒரு மொழியும் ஆக முடியும். இரண்டு எழுத்துக்களாலும் ஒரு மொழி ஆக முடியும். இரண்டுக்கு மேற்பட்ட பல வெழுத்துக்களாலும் ஒரு மொழி ஆகமுடியும். “. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/17&oldid=621362" இலிருந்து மீள்விக்கப்பட்டது