பக்கம்:மொழியின் வழியே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மொழியின் வழியே!

"ஒரெழுத் தொருமொழி

ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந்

தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை

தோன்றிய நெறியே’

  • (தொல்காப்பியம்) 'எழுத்தே தனித்தும்

தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம், அதுபாகப்

பதம் பகு பத மென இருபாலாகி இயலுமென்ப"

ஆசிரியர் தொல்காப்பியர் கூறாத பகாப்பதம், பகுபதம் என்னும் பிரிவுகளை நன்னூலார் ஏற்படுத்தினார் (indivisible Words and divisible Words). -g,3; Quoros) argpäämä a G56.11b. பெற்று எழுத்துக்கள்கூடி மொழியாக முன்னேறியிருக்கின்றன. உலக வழக்கும் செய்யுள் வழக்கும் அதன் முன்னேற்றத்திற்கு ஊற்றமாகத்துணை செய்திருக்கின்றன. அவற்றின்துணையால் மொழியின்ஆற்றலும், சொல்வளமும் பல்கி வளர்ந்திருக்கின்றன. எவற்றிற்கும் அசையாத திண்மையை உடையதாக மொழியை ஆக்கிய அரியபெரிய செயல் மக்களும் புலவரும் மனமகிழ்ந்து செய்த ஒன்றேயாகும். இனி எதிர்காலத்தில் மொழியின் மரபு கேடுறாதவாறு அதனை முன்னேற்றுவது எப்படி என்பதைப் பற்றிய செய்திகளைக் காண்போம்.

மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ளவேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவதுபோல் மொழியின் மேல் பயபக்தி ஏற்பட வேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/18&oldid=621363" இலிருந்து மீள்விக்கப்பட்டது