பக்கம்:மொழியின் வழியே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 2]

மருந்து கொடுக்கும்போது அதை ஒரு வெல்லக்கட்டிக்கு நடுவில் வைத்துக் கொடுப்பது வழக்கம். அதுபோலவே நேர்மையையும், பண்பாட்டையும் சூழ அமைத்துக் கொண்டு விளங்குகிறது தமிழகத்தின் வரலாறு. அறநூற் கருத்துக்களை நேரிடையாகக் கூறுவதினும் வரலாற்றில் அவை இயல்பாகவே அமைந்திருக்கும்போது அவற்றை எளிதாகக் கற்பித்துவிட முடியும். அம்முறையில் கற்பிக்கத் தகுந்த பேருண்மைகள் பொருந்திய வரலாறு எது என்று ஆராயும்போது முடிவாக முன் நிற்பது நம்முடைய பழவரலாறு ஒன்றுதான். வரலாறு என்றால் அது பிறப்பு இறப்புக்களின் பட்டியலாகவோ போரில் வெற்றி தோல்விகளின் விளக்கமாகவோதான் இருக்க வேண்டும் என்று ஒருவிதமான விரும்புதலற்ற நிலை யடைபவர்கள் தமிழகத்து வரலாற்றைக் கற்க முற்பட்டால் அந்த நிலைக்கு இடமிருக்காது என உறுதியாகச் சொல்லலாம்.

முறையான வரலாறு

கடந்த காலத்தின் அடிச்சுவடாக நிகழ் காலத்திலும் அழியாத வழிகாட்டியாக இருக்கும் இயல்புள்ளதே சிறந்த வரலாறு. தமிழகத்தின் வரலாறு இப்படி வழிகாட்டியாக, அமைவது வரலாறு என்று நாம் ஏதும் எழுதிக் கொள்ள வில்லை. ஆனாலும் நமது வரலாறு இலக்கியங்களைத் தழுவி இருந்துகொண்டே அழிவை விலக்கி வருகின்றது. அதைத் தனி வரலாற்று நூல்களாக மாற்றுகின்றபோது நாம் மேற்கூறிய 'பட்டியல் முறையிலே எழுதுவதில் பயனில்லை. நமது பழைய வரலாறு நிகழ்காலத்தின் புதிய சமுதாயத்திற்கும் முன்னோடியாகி, வழி வகுக்கும் முறையில் அமைய வேண்டும். அதுவே வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய வரலாற்றின் முறை ஆகும். வாழ்விற்குப் பயனற்ற வரலாறு.காட்டுமல்லிகையைப்போல யாருங் காணாமல், நுகராமல் மலர்ந்து மண்ணில் உதிர்ந்து அழிந்துபோகக் கூடியது. அது வரலாறு அன்று. நிகழ்ச்சிப் பட்டியலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/23&oldid=621368" இலிருந்து மீள்விக்கப்பட்டது