பக்கம்:மொழியின் வழியே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மொழியின் வழியே!

இங்கே வேறொரு செய்தியை நினைவூட்டுவது விலக்கமுடியாதது ஆகின்றது. வெளி நாட்டு ஆசிரியர்கள் எழுதியதனால் இந்திய வரலாறு அழியாத அடிமை முத்திரை ஒன்றைப் பெற்றது. அதுதான் கி.பி. - கி.மு. என்ற கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளம். இந்த நான்கு எழுத்துக்களை வைத்துக்கொண்டு இந்திய வரலாற்றிலே எவ்வளவு குழப்பங்களை எல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவு குழப்பங்களையும்அவர்கள் செய்திருக்கின்றார்கள். தங்கள் சொந்த நாட்டின் மனநிலையோடு அவர்கள் இந்திய நாட்டின் வரலாற்றைக் கருதினார்கள். அதன் விளைவு?... எனைத்தானும் இந்திய வரலாற்றோடு தொடர்பில்லாத கி.பி. கி.மு. அடையாளங்களை இட்டுத் தமக்குத் தோன்றிய யாவற்றையும் எழுதிப் போயினர். தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சிலர், கட்டுத் தறியில் பல நாட்களாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கன்று அவிழ்த்து விட்டபின்பும் தான் கட்டுண்டிருப்பதாகவே எண்ணி நிற்பது போலத் தமிழக வரலாற்றையும் இதே அடையாளங்களை இட்டு எழுதுகின்றனர். திருவள்ளுவருக்கு முன், திருவள்ளுவருக்குப் பின் என்று எழுதினால் என்ன குறைந்து போகின்றது? இந்திய வரலாறு பெற்ற அடிமைத்தளையை விடுபட்ட பின்பும் தமிழ் வரலாற்றிலே தமிழ் உணர்வு வளர்ந்துவரும் இக்காலையில் இட்டுப்பார்ப்பது கூடாது. இது தேவையில்லாத ஒன்றும் ஆகும் எனலாம். வரலாறும் வாழ்வும் - இலக்கியங்களையும், கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து வரலாறு எழுதும்போது வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான பயன்களைத் தருகின்ற முறையில் அவற்றை எழுத வேண்டும். தமிழகத்திற்கு வேண்டிய வரலாறு இந்த வகையில் தனிச் சிறப்புடன் அமையவேண்டுமே அன்றி கி.பி. கி.மு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/24&oldid=621369" இலிருந்து மீள்விக்கப்பட்டது