பக்கம்:மொழியின் வழியே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 25

(Politics), GLTGGITTSTILH (Economics) (lp565u LjSSSENGIt எவ்வாறு கற்பிக்க முடியும்? அவற்றிற்கு உரிய கலைச்சொற்கள் தமிழ் மொழியில் எங்கே இருக்கின்றன? சிந்தனை வளமும் மொழிகளின் இயல்பை நன்கு ஆராய்ந்து உணர்ந்த பயிற்சியும் உடைய பேராசிரியர்களிடமிருந்து இத்தகைய வினாக்களே பிறக்க மாட்டா. ஒருவேளை பிறந்துவிட்டால் என்ன கூறி எப்படி அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடியும் நம்மால்? மேற்கூறிய பகுதிகளைத் தமிழிலே போதனை புரிவது எளிய செயல் என்று துணிந்து கூறிவிடுவதற்கு நமக்குப் பித்துப் பிடித்திருக்கிறதா என்ன? ஆனால், கலைச் சொற்கள் தமிழில் எங்கே இருக்கப்போகின்றன? இதெல்லாம் ஆகாத காரியம், வீண் முயற்சி - என்று சொன்னால் இப்படிச் சொல்லுகின்ற வர்களிடம் நமக்கு அதுதாபம், பரிதாபம், சிரிப்பு எல்லாம் வருகிறது. ஆங்கில மொழி போற்றிப் பயில வேண்டிய மொழி என்பதை எந்தத் தமிழறிஞரும் மறுத்தது இல்லை. மறுக்க விரும்பியதும் கிடையாது. ஆனால், அதே சமயத்தில் அறிவியல், அரசியல், பொருளியல் முதலிய கலைப் பகுதிகளும், அவற்றிற்கான கலை நூல்களும் அந்நூல்களுக்கான கலைச் சொற்களும் ஆங்கில மொழியைத் தவிர உலகின் வேறு எந்த மொழிக்கும் கிடையாது என்று கூறினால் அதை எவ்வாறு ஒப்புக்கொள்ள முடியும்? வேறு மொழிகளுக்கு இந்தக் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும் வாய்ப்பு ஆங்கிலத்தைப் போலக் கிடைக்கவில்லை. ஆங்கிலத்திற்குத் தன்னைப் பேசும் மக்களினத்தின் மிகுந்த பரப்பாலும் மேற் கூறிய கலைகள் வளருவதற்குரிய சூழ்நிலைகளாலும் இந்தத் தகுதி மிகுதியாகக் கிடைத்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்; கூறினால் ஒரளவு ஒப்புக் கொள்ள முடியும். தயக்கம் யாருடையது?

தமிழுக்கு அந்தத்தகுதி இல்லை.அதை உண்டாக்குவதும், அருமை என்று கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு: பொருந்தாத துணிவு. இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்கமுடியாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/27&oldid=621372" இலிருந்து மீள்விக்கப்பட்டது