பக்கம்:மொழியின் வழியே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மொழியின் வழியே!

"சொல்லவுங் கூடுவதில்லை அவை சொல்லுந் திறமை தமிழ்

மொழிக் கில்லை மெல்லத் தமிழ் இனிச்சாகும்

அந்த மேற்கு மொழிகள்

புவிமிசை ஓங்கும் என் றந்தப் பேதை

உரைத்தான் - ஆ இந்த வசை எனக்

கெய்திட லாமோ? சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

கலைச் செல்வங்கள் யாவும் - கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ என்று, தமிழுணர்வு குன்றியிருந்த அன்றைய நாளிலேயே ஒரு தமிழ் உள்ளம் குமுறிச் சென்றிருக்கிறது. இன்று ஒராயிரமுள்ளங்கள் - அல்ல ஒரு கோடி தமிழுள்ளங்கள் குமுறும். இது வெறி அன்று. உரிமையின் வேட்கை. அறிஞர் மு.வரதராசன் அவர்கள் கூறுவதுபோலக் கல்லூரிகளில் போதிப்பவர் மேற்படி கலைகளை ஆங்கில மொழியிலேயே கற்பித்துப் பழகிவிட்டதுதான் இந்தத் தயக்கத்திற்குக் காரணம். தமிழில் மேற்படி கலைகளைப் போதிக்கலாம். கலைச் சொற்கள் உள்ளன. இன்றியமையாத நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம். கற்றுக்கொண்டிருக்கிற மாணவர்களின் தயக்கமன்று இது. கற்பிக்கின்ற ஆசிரியர்களின் தயக்கமே.

தமிழில் முடியும்!

அறிவியல், அரசியல் முதலியன கல்லூரிகளில் கற்பிக்கப் படும்போது, அவற்றைக்கற்பிக்கின்ற ஆசிரியர்கருவிநூல்களாக (Reference Books) எவ்வெவற்றைப் பயன்படுத்துகின்றனரோ அவைபோன்ற கருவி நூல்களை முதலில் தமிழில் இயற்ற வேண்டும். இதற்கு அந்தக் கலைகளின் போதகராகிய பேராசிரியர்கள் தமிழ் மொழியோடும் தமிழ் நூல்களுடனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/28&oldid=621373" இலிருந்து மீள்விக்கப்பட்டது