பக்கம்:மொழியின் வழியே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 29

முறை துறைகள் வேறுபாடுடையன. இசைமரபு என்னும் பழந் தமிழ் இசை நூலில் அப் பதினொரு வகைப் பாடல்களையும் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

'உள்ளாளம் விந்துவுட னாத மொலியுருட்டுத் தள்ளாததுக் கெடுத்தல் தான் படுத்தல் - மெள்ளக் கருதி நலிதல் கம்பித்தல் குடிலம் ஒருபதின் மேல் ஒன்றென்றுரை." (1) உள்ளாளம், (2) விந்து, (3) நாதம், (4) ஒலி, (5) உருட்டு, (6) துக்கு, (7) எடுத்தல், (8) படுத்தல், (9) நலிதல், (10) கம்பித்தல், (11) குடிலம்.

இப்பதினொரு வகைப் பாடல் நெறிகளிலும் உள்ளாளப் பாடல் நெறி தலை சிறந்தது. இசை பாடுவார்க்கு இன்ன வின்ன குற்றங்கள் ஆகா என வரையறுத்துக் கூறும் இலக்கண அமைப்பை உடையது. உள்ளாளப் பாடல் நெறியிலிருந்து நாமறியும் இசையியல்பு நுணுகியதொரு பேருண்மையாக அமைகிறது. தற்கால இசைவாணர்களிற் பெரும்பாலோரிடத்தில் நாம் காணுகின்ற ஒரு பெரிய குறை என்னவென்றால், அங்க அசைவுகள் என்றுதான் சொல்ல வேண்டும். உயர்ந்த இசை யின்பத்திற்குரிய சுவை நுகர்ச்சியை இவ்வங்க அசைவுகள் ஒரளவு பாதிக்கத்தான் செய்கின்றன. பாடுகின்றவர் தரத்தில் உயர்ந்த இசையைத் தேனாக உருக்கி இழைத்துப் பாட்டாகப் பாடி அவையில் உள்ளவர்களைக் கவர முயன்றாலும் அவரிடத்தில் உள்ள மிகச் சிறிய தவறாகிய அங்க அசைவால் அக் கவர்ச்சி ஏற்படாமற் பாழ்பட்டு விடுகிறது. அங்க அசைவால் தோன்றுகின்ற சிறிய நகைச்சுவை பெரிய இசைச் சுவையைத் தலையெடா வண்ணம் கீழ்ப்படுத்தி விடுகிறது.

இசைவாணரிடம் சுவைப்பவன் உண்மையான சுவையைக் காணவேண்டுமானால் கடவுளிடம் அடியானுக்கு ஏற்படுகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/31&oldid=621376" இலிருந்து மீள்விக்கப்பட்டது