பக்கம்:மொழியின் வழியே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மொழியின் வழியே!

பாசம் அவனுக்கு இசைவல்லுநரிடம் ஏற்பட வேண்டும். சுவைப்பவன் இசைப்பவனுடைய அதிமனித ஆற்றலிற் கலந்துள்ள தெய்வத் தன்மையை உணர்ந்தாலொழிய உண்மையான இரசனை தோன்றுவதற்கு இடம் ஏற்படாது. யானறிந்த இசைவாணரொருவர் இங்கே எடுத்துக்காட்டாக அமையத்தக்கவர். பாட ஆரம்பித்தவுடன் குடுமி முடியவிழ்ந்து விடும். கண்கள் காது வரை வலித்துக்கொண்டு செல்லும். புருவம் நெற்றியோடு போர் செய்யும். கழுத்து விம்மி விம்மி நெஞ்சுக் குழி தெரிவதும், புடைப்பதுமாக இருக்கும். இடை இடையே பலாச்சுளைப் பற்கள் ஒரு வெடிச் சிரிப்பை ஒலியின்றி வெளிக்காட்டும். உடல் ஆடும் ஆட்டமோ சொல்ல வேண்டியதே இல்லை. ஆரோகண அவரோகண கதிகளை அவையினர்க்கு விளக்குவதாக எண்ணமோ, என்னவோ ஒரு கை மேலே போகும், மற்றொரு கை கீழே அங்கவஸ்திரத்தைத் திருகிக் கொண்டிருக்கும். முன்னே பருத்தெழுந்த தொந்தியின் அவஸ்தை வேறு. இப்படிப்பட்ட இலட்சணங்களுடன் அவர் பாடினால் அந்த இசையின் தெய்விகத் தன்மை என்ன ஆகும்? அது வெறும் இசையாக மட்டுமா இருக்கும்? நடனம், நடிப்பு, தேகப்பயிற்சி முதலிய எல்லாம் கலந்த ஒரு கதம்பமாக அல்லவா இருக்கும்? இத்தகைய இசைக் குற்றங்கள் சிறிதும் வராமற் பாடுவதுதான் உள்ளாளப் பாடல் முறை. காந்தருவதத்தை வீணையுடன் வாய்ப் பாட்டும் பாடிய கலைத் திறத்தைச் செய்யுளிலே விளக்கமாகச் சித்திரிக்க வந்த சீவக சிந்தாமணி ஆசிரியர்,

'கருங்கொடிப் புருவமேறா கயல்

நெடுங் கண்ணுமாடா அருங்கடி மிடறும் விம்மா(து)

அணிமணி எயிறுந் தோன்றா இருங்கடற் பவளச் செவ்வாய்

திறந்திவள் பாடினாளோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/32&oldid=621377" இலிருந்து மீள்விக்கப்பட்டது