பக்கம்:மொழியின் வழியே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 37.

என்பது நம் தமிழ் மரபு கண்ட பாட்டிலக்கணம். பாடுவதற்கு ஒருரிமை பூண்டுயர்ந்த பொருள் வேண்டும். அந்தப் பொருளை உணர்வின் வன்மையால் அணிபெற உருவாக்குதல் வேண்டும். சாதாரண நடையில் சாதாரணக் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல் புலத்தார் வழக்கில் உண்டு. இக்காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது.

f6 sol-& G)&#ti, uj67 (Free verse - blank verse) argirl iff அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே. உடலைக் காட்டிலும் கட்புலனாகாத உயிர் உயர்ந்ததாதல் போலப் பாட்டின் பதங்களையும் ஓசையையும், அணி அழகுகளையும் விட மிகச் சிறந்து அமைய வேண்டும் அதன் பொருள்.

எனவே, இதுகாறுங் கூறியவற்றால் பாட்டுக்குக் குறிக்கோள் இன்றியமையாததென்றும் குறிக்கோளோடு கூடிய பாட்டுக்கும் ஒரு நெறி முறை வேண்டும் என்றும் பாடுவார் பாடுவனவெல்லாம் பாட்டாகா, பாடத் தகுதி வாய்ந்தோர் பாடுவனவே பாட்டாகும் என்றும் பொருட்கு இடமாகச் செய்வது பாட்டின் இயல்பென்றும் கண்டோம். பாட்டு வாழ்க, அதன் குறிக்கோள் உயர்க! - - 亡]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/39&oldid=621384" இலிருந்து மீள்விக்கப்பட்டது